தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Uthiradam Nakshatram: ’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 17, 2024 04:34 PM IST

”Uthiradam Nakshatram: சூரியனின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றான உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதம் குரு பகவான் ஆட்சி பெற்ற தனுசு ராசியிலும், கடைசி மூன்று பாதங்கள் சனி பகவானின் ஆட்சி பெற்ற மகரம் ராசியிலும் உள்ளது.”

’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
’சூரியனின் ஆசி பெற்றவர்கள்!’ உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

தலையற்ற நட்சத்திரம் ஆன உத்திராடம் 

இரண்டு ராசிகளில் ஒரு நட்சத்திரம் இருப்பதால் உத்திராடம் நட்சத்திரம் தலையற்ற நட்சத்திரமாக கருதப்படுகிறது. 

உத்திராடம் நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள்:-

உத்திராடம் முதல் பாதத்தில் சூரியனும், குருவும் இணைந்த நிலை உள்ளதால், இவர்கள் சுறுசுறுப்பாகவும், படிப்பு, கேள்வி, ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். 

உத்திராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் வேலையில் மிக கவனமாக இருப்பார்கள்.

உத்திராடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வீண் கௌரவம், புகழ் ஆகியவற்றை எதிர்பார்ப்பதால் சில வருமானங்களை இழக்க நேரிடலாம். 

உத்திராடம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் செய்யும் தொழிலில் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் இருக்க கூடியவர்கள்.

மூத்தவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள்:-

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வயதில் மூத்தவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தரக்கூடியவர்கள். பெற்றோர்களையே அதிகம் சார்ந்து இருப்பதால் சில நேரங்களில் சுயபுத்தியை இழக்க நேரிடலாம். 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவுகளிடம் அன்பாக பழக கூடியவர்கள் என்பதால் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நற்பெயர்கள் இருக்கும். 

இவர்களுக்கு பக்தி, ஆன்மீக நாட்டம் அதிகம் இருக்கும். குருவை உபசரிப்பது என்பது இயல்பாக வரும். 

நீச்சல் செய்வதில் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். 

உத்திராடம் நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை:-

மனுஷ கணம் கொண்ட உத்திராடம் நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். உத்திராடம் நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு கிரி ஆகும். உரிய விருட்சம் பலா மரம், உரிய பறவை வலியன் பறவை ஆகும். 

வழிபட வேண்டிய ஆலயங்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவகங்கைக்கு அடுத்து உள்ள கீழபூங்குடி பகுதியிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் வழிபட நன்மைகள் கிடைக்கும். மேலும் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயில்களில் வழிபாடு செய்து வர அனுகூலங்கள் கிடைக்கும். 

அனுகூல பலன்கள் தரும் தசைகள்:-

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சூரிய தசையும், இரண்டாவது தசையாக சந்திர தசையும், மூன்றாவது தசையாக ராகு தசையும், நான்காவதாக செவ்வாய் தசையும் வருகிறது. 

இவர்களுக்கு சந்திர மகா தசை; சந்திர புத்தி, ராகு மகா தசை; ராகு புத்தி, சனி மகா தசை; சனி புத்தி, கேது மகா தசை; கேது புத்தி, சுக்கிர மகா தசை ஆகியவை சாதகமான பலன்களை வழங்கும். 

இந்த நட்சத்திரத்திற்கு உரிய வசிய நட்சத்திரமாக உத்திரம் நட்சத்திரம் வருகிறது.

வெற்றி தரும் நட்சத்திர நாட்கள்

மேலும் ரோகிணி, திருவோணம், அஸ்தம், சுவாதி, சதயம், திருவாதிரை, அனுசம், உத்திரட்டாதி, பூசம், மகம், அஸ்வினி, மூலம், பரணி, பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை தொடங்கினால் நன்மைகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel