Thiruvonam Nakshatram: ’வாழ்கையில் பண கஷ்டமே இருக்காது’ திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
”தேவ கணம் பொருந்திய திருவோண நட்சத்திரக்காரர்கள் வம்புதும்புக்கு செல்லாமல், சாதூரியமாக காய்களை நகர்த்தக் கூடியவர்கள்”
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு ஜீவன வகையில் எந்த வித குறையும் வாழ்நாள் முழுக்க இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இந்த நட்சத்திரம் மகாவிஷ்ணு பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவகள் எல்லோராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்கள், சந்திரனின் சந்தோஷ நிலை அமைப்பு எப்போதும் இவர்களுக்கு உண்டு. சனி பகவானின் ராசியில் இருப்பதால் சில மனச்சோர்வுகளுக்கு திருவோண நட்சத்திரத்தினர் ஆட்பட்டாளும், சந்தோஷமாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாசனை திரவியங்கள், பூக்கள் மீது அதிக ஆர்வம் இருக்கும்.
இவர்களின் தோற்றம் கம்பீரமானதாக இருக்கும். விரைவில் கோபப்படுபவர்களாக இருந்தாலும், விரைவில் அதில் இருந்து மீள்வார்கள். இவர்களுக்கு கல்வி நன்றாக வரும். அதே நேரத்தில் நண்பர்கள், எதிர் பாலினத்தவரின் நட்பு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
இயற்கையிலேயே சேமிப்பு குணம் பெற்றவர்களாக இருக்கும் இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் செல்வ செழிப்பு இருக்கும்.
தேவ கணம் பொருந்திய திருவோண நட்சத்திரக்காரர்கள் வம்புதும்புக்கு செல்லாமல், சாதூரியமாக காய்களை நகர்த்தக் கூடியவர்கள்.
இந்த நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரமாகவுள்ளது, இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு பெண் குரங்காகவும், உகந்த செடியாக எருக்குச்செடியும், பறவையாக நாரையும் வகைப்படுத்தப்படுகிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலூர் மாவட்டம் காவிரி பாக்கத்திற்கு அருகில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்குவது சிறப்பு தரும், மேலும் உங்கள் ஊரில் உள்ள பெருமாள் அல்லது சிவன் கோயில்களில் வழிபாடு நடத்தி வந்தாலே நல்ல பலன்களை பெற முடியும்.
இந்த நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக பூராடம் நட்சத்திரம் விளங்குகிறது. இவர்களுக்குள் எளிதாக புரிதல் இருக்கும். எளிதில் ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துவர்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சந்திர தசை வரும், பின்னர் செவ்வாய் திசை வரும்.
சந்திர மகாதசை, செவ்வாய் தசை, செவ்வாய் புத்தி, குரு தசை, குரு புத்தி, புதன் தசை, புதன் புத்திகள், சுக்கிர தசை, சுக்கிர புத்திகள், சூரிய தசை, சூரிய புத்திகள் ஆகியவை இவர்களுக்கு அனுகூல பலன்களை தரக்கூடியது.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மிருகசீரிசம், அவிட்டம், சித்திரை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூராடம், பூரம், கிருத்திகை, உத்திரம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களில் நல்ல காரியங்களை தொடங்கினால் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.