Thiruvathirai Nakshatram: ’நடராஜர் அவதரித்த நட்சத்திரம்!’ திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
”திருவாதிரை நட்சத்திரத்தில்தான் நடராஜர் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. புதன் பகவானின் ராசியான மிதுனம் ராசியில் முழு நட்சத்திரமான திருவாதிரையின் அதிபதியாக ராகு பகவான் உள்ளார்”
திருவாதிரை நட்சத்திரத்தில்தான் நடராஜ பெருமான் அவதரித்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன. புதன் பகவானின் ராசியான மிதுனம் ராசியில் முழு நட்சத்திரமான திருவாதிரையின் அதிபதியாக ராகு பகவான் உள்ளார்.
சமயோஜித புத்தி கொண்டவர்கள்!
பிறப்பிலேயே சமயோஜித புத்தியை கொண்ட இவர்கள் காலத்திற்கு ஏற்றார் போல் முடிவுகளை மாற்றி எடுக்கக்கூடியவர்கள். இவர்களை புரிந்து கொள்வது சற்று கடினமானதாக இருக்கும். ஆனாலும் தன்னுடைய காரியத்தில் கண்ணாக இருக்கும் சுயநலவாதிகளாக இவர்கள் இருப்பார்கள்.
சகல வித்தைகளிலும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். எதையும் மறைத்து பேசும் குணம் இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.
ராகுவின் போகமும்! புதனின் அறிவும்!
போக காரகனான ராகுவின் நட்சத்திரமாக திருவாதிரை வருவதால், ஆடம்பர விஷயங்களில் இவர்களுக்கு பிரியம் இருக்கும். புதனின் வீட்டில் திருவாதிரை நட்சத்திரம் இருப்பதால் அறிவுத்தேடல் அதிகம் இருக்கும்.
இவர்களின் அறிவுத்திறனை வைத்து அதிகமாக பொருள்ளீட்டுவார்கள். கடின வேலைகளை செய்து பொருளீட்டும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.
பணத்தை விட பண்பை அதிகம் நேசிக்கும் இவர்கள் சிக்கனவாதிகளாக இருப்பார்கள்.
பாதம் வாரியான திருவாதிரை நட்சத்திர பலன்கள்!
திருவாதிரை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள்.
திருவாதிரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் வரவு செலவு மற்றும் கணக்கு வழக்குகளில் மிக சரியாக இருப்பார்கள்.
திருவாதிரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் லாபம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டு இருப்பார்கள்.
திருவாதிரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆச்சார அனுஷ்டானங்களில் அதிக ஈடுபாடு கொண்டு இருப்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரதிற்கு உரிய விலங்கு, பறவை, விருட்சம்!
மனுஷ கணம் பொருந்திய ஆண் நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்தின் விலங்காக ஆண் நாய் உள்ளது. இதற்கு உரிய விருட்சமாக செங்காய் மரம் உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய பறவையாக அன்றில் பறவை உள்ளது.
வழிபட வேண்டிய ஆலயங்கள்!
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதியாக ஸ்ரீ ருத்திரன் உள்ளார். இந்த நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூரை அடுத்த அதிராமப்பட்டினத்தில் உள்ள அபயபரதீஸ்வரர் கோயிலை வழிபட நன்மைகள் கிடைக்கும். மேலும் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்து வர சகல நன்மைகளும் கிடைக்கும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த தசை
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு முதல் தசையாக ராகு தசை உள்ளது. இந்த திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான தசா காலங்களாக குரு தசை, புதன் தசை, சந்திர தசை, சுக்கிர தசை, செவ்வாய் தசை ஆகியவை உள்ளது. திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய வசிய நட்சத்திரமாக மூலம் நட்சத்திரம் உள்ளது.
வெற்றிகளை பெற்றுத்தரும் நட்சத்திரங்கள்!
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிசம், சித்திரை அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் அனுகூலம் தரும் நட்சத்திரங்களாக உள்ளன. இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய செயல்களை திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தொடங்கினால் வெற்றிகள் கிட்டும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.