தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Sadhayam Nakshatram: ‘எதிரிகளை ஓட விடுவார்கள்!’ ராஜராஜன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்!

Kathiravan V HT Tamil
Apr 28, 2024 05:14 PM IST

“ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் இவர்களுக்கு அதிக ஈடுபாடுகள் இருக்கும். இவர்கள் பொய்பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்களை திருப்தி செய்வது கடினம்”

ராஜராஜ சோழன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்
ராஜராஜ சோழன் பிறந்த சதயம் நட்சத்திரத்தின் பலன்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசதி வாய்ப்பு மற்றும் செல்வச்செழிப்பு மிக்கவர்களாக திகழ அதிக வாய்ப்பு உண்டு. 

அரசியல் செல்வாக்கு பெற்றவர்களாகவோ அல்லது அரசியல் செல்வாக்கு பெற்றவர்களுடன் நட்பாகவோ இவர்கள் இருப்பார்கள். 

ஆண்களாக இருந்தால் பெண்களிடமும், பெண்களாக இருந்தால் ஆண்களிடமும் இவர்களுக்கு அதிக ஈடுபாடுகள் இருக்கும். இவர்கள் பொய்பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். இவர்களை திருப்தி செய்வது கடினம். 

இந்த நட்சத்திரத்திற்கு ராகு அதிதேவதையாக உள்ளது. பெண் நட்சத்திரமான சதயம் ராட்ச கணமாக உள்ளது. 

சதயம் நட்சத்திரத்தின் விலங்காக பெண் குதிரை உள்ளது. இதன் விருட்சமாக கடம்பு மரமும், பறவையாக அண்டம் காகமும் உள்ளது. 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், திருவாரூருக்கு அருகே உள்ள திருப்புகலூர் எனும் ஊரில் உள்ள பிரம்மபுரீஸ்வர் ஆலயத்தில் சென்று வழிபாடு செய்ய நன்மைகள் பிறக்கும், அல்லது சதயம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தி வர நன்மைகளை பெறலாம். 

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு முதல் தசையாக ராகு மகாதிசை வருகிறது. இவர்களுக்கு அனுகூலமாக தசாபுத்திகளாக குரு மகாதசை; குருபுத்தி, புதன் மகாதசை; புதன் புத்தி, சுக்ர மகாதசை; சுக்ரபுத்தி, சந்திர மகாதசை; சந்திரபுத்தி, செவ்வாய் மகாதசை; செவ்வாய் புத்தி ஆகியவை உள்ளது. 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசிய நட்சத்திரமாக அஸ்வினி நட்சத்திரம் உள்ளது. சதயம் நட்சத்திரத்தில் எம தர்ம ராஜா பிறந்து உள்ளதாக புராணங்கள் கூறுகிறது. மேலும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்தான். 

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ரேவதி, கேட்டை, ஆயில்யம், பூராடம், பரணி, பூரம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களில் இவர்கள் எடுக்கும் காரியம் வெற்றியை தேடித்தரும். 

சதயம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சற்று அதிக புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவர். 

சதயம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் செல்வம் சேர்ப்பதில் வல்லமை பெற்று விளங்குவர். 

சதயம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் பெயரை கண்ணும் கருத்துமாக கலங்காமல் பார்த்துக் கொள்வார்கள். 

சதயம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியே வாழ்கை என்று வாழ்வார்கள். 

ராகு போகக்காரகன் என்பதால் சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு போகங்கள் மீது ஆர்வம் அதிகம் இருக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel