Rohini Nakshatram: ‘கிருஷ்ணர் பிறந்த நட்சத்திரம்!’ ரோகிணி நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
Rohini Nakshatram: ரோகிணி நட்சத்திரத்தில்தான் சந்திர பகவான் உச்சம் அடைகிறார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக பிரம்மா உள்ளார்.
சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷபம் ராசியில் அமைந்து உள்ளது. இது மட்டுமின்றி ரோகிணி நட்சத்திரத்தில்தான் சந்திர பகவான் உச்சம் அடைகிறார். ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக பிரம்மா உள்ளார்.
கிருஷ்ணர் பிறந்த ரோகிணி நட்சத்திரம்
கிருஷ்ண பரமாத்மா பிறந்த நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் விளங்குகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. ஆனால் அதில் உண்மை என்னவெனில் தாய் மாமன் மோசமான தீய செயல்களை செய்பவராக இருந்தால் இது நடக்கும் என்றும், தாய்மாமன் நல்லவராக இருந்தால் கண்டிப்பாக இது நடக்காது என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் குணங்கள்
நினைத்தை முடிக்க கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இவர்கள் விளங்குகின்றனர். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் உல்லாச பிரியர்களாக இருப்பார்கள்.
புத்திசாலித்தனத்துடன் செயல்படும் தன்மை கொண்ட இவர்கள் நேரத்திற்கு தகுந்தார்போல் முடிவுகளை எடுப்பதில் வல்லவர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுபிட்சம், மகிழ்ச்சி பெற்று வாழ்வார்கள். இவர்களுக்கு பால் உள்ளிட்ட வெண்மையான உணவுப்பொருட்கள் மீது அதிக விருப்பம் இருக்கும்.
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள்
மனுஷ கணத்தை சேர்ந்த ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு நாகப்பாம்பு ஆகும். இதற்கு உரிய பறவை ஆந்தை ஆகும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள பாண்டவதூத பெருமாள் கோயிலில் வழிபாடு செய்ய நன்மைகள் கிடைக்கும். மேலும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள திருமால் மற்றும் சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்வது அனுகூலங்களை பெற்றுத்தரும்.
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலம் தரும் தசைகள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு முதல் தசையாக சந்திர மகா தசை வருகிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு செவ்வாய் தசை, குரு தசை, புதன் தசை, சுக்கிர தசை, சூரிய தசைகள் அனுகூலம் தரும் தசைகளாக விளங்குகிறது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவிட்டம், மிருகசீரிசம், சித்திரை, புனர்பூசம், விசரகம் பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை நட்சத்திரங்கள் வரக்கூடிய நாட்களில் புதிய செயல்களை தொடங்க நன்மைகள் கிடைக்கும்.
ரோகிணி நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள்
ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு வசிய நட்சத்திரமாக மிருகசீரிசம் நட்சத்திரம் உள்ளது.
ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வீரம் செறிந்து இருக்கும்.
ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செல்வ நிலை கூடுதலாக இருக்கும்.
ரோகிணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தந்திரம் மற்றும் சமயோஜித புத்தியும் நிறைந்து இருக்கும்.
ரோகிணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தோஷ நிலை அனுபவிக்கும் சூழல் ஏற்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.