தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

Poosam Nakshatram: ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

Kathiravan V HT Tamil
May 20, 2024 05:41 PM IST

”Poosam Nakshatram: பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரனின் மதிநுட்பமும், சனியின் நிதானமும் ஒருங்கே பெற்று செயல்படுபவர்கள்”

’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!
’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!

பூசம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள்

சனி பகவானின் நிதானப்போக்கும். மதிகாரகனான சந்திரனின் மதிநுட்பமும் இவர்களுக்கு அனுகூலங்களை பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும்.  

பூசம் நட்சத்திரக்காரர்கள் நேர்மையானவர்களாக இருப்பார்கள், சில விஷயங்களை எப்படியும் அடம் பிடித்து சாதித்துவிடுவார்கள், காரியத்தை சாதிக்க பொய்களை சொல்ல தயங்கமாட்டார்கள். 

பூசம் நட்சத்திரக்காரர்களின் பாத வாரியான பலன்கள்:-

பூசம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக வீரம் கொண்டவர்களாக விளங்குவார்கள். 

பூசம் இரண்டாவது பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியும், அறிவு மிகுந்தும் காணப்படுவார்கள், ஆனாலும் சில நேரங்களில் இவர்கள் சலிப்புடன் பேசுவார்கள். வாழ்கை துணை தொடர்பான விவகாரங்களில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் இவர்கள் வாழ்கை இன்பமாக அமையும். 

பூசம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் சௌகரியமான வாழ்கையை வாழ்வார்கள். 

பூசம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழமாக யோசித்து செயல்படுவார்கள். அறிவுக் கூர்மையுடன் செயல்படும் இவர்களுக்கு வாழ்கையில் நன்மைகள் கிட்டும். 

பூசம் நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை

தேவ கணம் பொருந்திய பூசம் நட்சத்திரம் ஒரு ஆண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் விலங்கு ஆடு ஆகும். இதற்கு உரிய விருட்சம் அரச மரம் ஆகும். உரிய பறவை நீர் காகம் ஆகும்.  இந்த நட்சத்திரத்தின் அதிதேவதியாக பிரகஸ்பதி எனும் குரு பகவான் உள்ளார்.  

பூசம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள்:-

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தஞ்சாவூருக்கு அருகே உள்ள விளாங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்துவர பெரும் நன்மைகள் கிடைக்கும். மேலும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு நடத்த அனுகூலங்கள் கிடைக்கும். 

பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான தசை மற்றும் புத்தி:- 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சனி மகா தசை வருகிறது. சனி தசை என்பது ஸ்திர தசை என்பதால், ஆயுள் விருத்தி உண்டாகும். 

மேலும் இவர்களுக்கு புதன் தசை; புதன் புத்தி, சுக்கிர தசை; சுக்கிர புத்தி, சந்திர தசை; சந்திர புத்தி, ராகு தசை; ராகு புத்தி, குரு தசை; குரு புத்தி ஆகியவை நன்மைகளை தரும். 

இந்த நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நண்பர்களாகவோ அல்லது வாழ்கைத்துணையாகவோ அமைந்தால் இனிமை கூடும். 

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருஓணம், திருவாதிரை, சுவாதி, சதயம், புணர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நாட்களில் புதிய செயல்களில் இறங்கினால் நன்மைகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel