தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 08, 2024 03:17 PM IST

”இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடம்பர செலவுகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வரும் வாழ்கைத்துணை வசதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள்”

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்

இவர்கள் எப்போதும் கலகலப்பாக பேசக்கூடியவர்களாகவும், துள்ளல் அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்ட இவர்களுக்கு தாய் அன்பு இயல்பிலேயே இருக்கும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடம்பர செலவுகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு வரும் வாழ்கைத்துணை வசதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். 

குறிப்பாக பெண்கள் தாய் வீட்டில் இருந்ததைவிட புகுந்த வீட்டில் சிறப்பான வாழ்கையை வாழ்வார்கள். 

தொழிலில் பின்னாள் நடைபெற உள்ளதை முன் கூட்டியே சொல்லும் திறன் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். 

பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள். 

இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷம், அமைதி ஆகியவை நிறைந்து காணப்படும். 

பூரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும். 

பூரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சற்று வருத்தம் கலந்த வாழ்கை இருக்கும். 

மனுஷ கணம் பொருந்திய பூரம் நட்சத்திரம் பெண் நட்சத்திரமாகும், இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்காக எலியும், விருட்சமாக பலா மரமும், பறவையாக பெண் கழுகாகவும் உள்ளது. 

இந்த நட்சத்திரத்திற்கு உரிய தலமாக திருவரங்குளம் ஆதி தீர்த்தேஸ்வரர் கோயில் மற்றும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுதூர் கோயில் உள்ளது. 

பூரம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் மற்றும் திருமால் ஆலங்களில் வழிபாடு நடத்த நன்மைகளும், அனுகூலங்களும் கிடைக்கும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வரும். பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சுக்கிர தசை இருக்கும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கும், மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கும், நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 5 வருடங்களுக்கு உள்ளாக சுக்கிர தசை இருக்கும். 

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்கையில் கண்டிப்பாக பொருளாதார ரீதியான வளர்ச்சி இருக்கும். எப்போதும் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியாக இவர்கள் இருப்பார்கள். 

சூரிய மகா தசை; சூரிய புத்தி, செவ்வாய் மகா தசை; செவ்வாய் புத்தி, குரு மகா தசை; குரு புத்தி, புதன் மகா தசை; புதன் புத்தி, கேது மகா தசை; கேது புத்தி ஆகிய காலங்கள் அனுகூலங்களையும், நன்மைகளையும் பெற்றுத்தரும். 

இந்த நட்சத்திரத்திற்குரிய வசிய நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் உள்ளது.

உத்திரம், உத்திராடம், கிருத்திகை, மிருகசீரிசம், அவிட்டம், சித்திரை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel