Pooradam Nakshatram: ’வருண பகவான் பிறந்த பூராடம் நட்சத்திரம்!’ பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
”அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும்”

இது போன்ற போட்டோக்கள்
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
அசுர குரு எனப்படும் சுக்கிரன், சுபிட்சத்தின் காரகன், லவுகீக சுகங்களுக்கு அதிபதி ஆவார். அதாவது அசுர குருவின் நட்சத்திரம் தேவ குருவின் ராசியில் இருப்பது பூராடம் நட்சத்திரத்தின் சிறப்பாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் இருப்பார்கள். அவர்களின் நிலையை பார்த்து மற்றவர்களும் அவரின் வழியை பின்பற்றுவார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் மீது அன்பு அதிகமாக இருக்கும். தேவ குருவின் வீட்டில் அசுர குரு இருப்பதால், சிலர் வீம்புக்கு வாதம் செய்வார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணவதியான மனைவி கிடப்பார். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிற்றுண்டி பிரியர்களாக இருப்பார்கள். சூடான உணவை சுவைப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.
பொய் சொல்ல தயங்கும் இவர்களால் உண்மையை தயக்கமின்றி கூறுவார்கள். வாசனை திரவியங்கள் மீதும், கலைகள் மீதும் அதிக நாட்டம் இருக்கும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போதும் லவுகீக சுகங்களை நன்றாக அனுபவித்துக் கொண்டே ஆன்மீகம் நோக்கி பயணிப்பார்கள்.
பூராடம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள், எதிலும் வெற்றி வீரர்களாக விளங்குவார்கள், இவர்களுக்கு கோபமும், வீரமும் வெளிப்படும்.
பூராடம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள், கணக்கு வழக்குகளில் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள். எதையும் அமைதியாக கூர்ந்து கவனிக்கும் குணம் இவர்களுக்கு இருக்கும்.
பூராடம் மூன்றாவது பாதத்தில் பிறந்தவர்கள், சந்தோஷ பிரியர்களாக இருப்பார்கள்.
பூராடம் நான்காவது பாதத்தில் பிறந்தவர்கள் செல்வத்தை சேர்க்க நிறைய பாடுவார்கள்.
மனுஷ கணம் பொருந்திய பூராடம், ஆண் நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விளங்கு குரங்கு ஆகும். இந்த நட்சத்திரத்திற்கான விருட்சம் வஞ்சி மரம் ஆகும், இந்த நட்சத்திரத்திற்கான பறவையாக கௌதாரி பறவை உள்ளது.
தஞ்சாவூருக்கு அருகே உள்ள கடுவெளி அகாச புரிஸ்வரர் என்ற சிவாலயத்திற்கு சென்று பூராட்சம் நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், பூராடம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சிவனை வழிபட்டு வருவதும் சகல நன்மைகளையும் ஏற்படுத்தி தரும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகாதசை வருகிறது. இந்த நட்சத்திரத்தில் வருண பகவான் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
சூரிய மகாதசை; சூரிய புத்தி, செவ்வாய் மகா தசை, செவ்வாய் புத்தி, குரு மகாதசை, குரு புத்தி, புதன் மகாதசை, புதன் புத்தி, கேது மகாதசை, கேது புத்தி ஆகியவை பூராடம் நட்சத்திரத்திற்கு அனுகூலத்தை பெற்றுத்தரும். இந்த நட்சத்திரத்திற்கு வசிய நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் விளங்குகிறது.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
