தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Moola Nakshatram: 'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

Moola Nakshatram: 'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 15, 2024 04:12 PM IST

“Moola Nakshatram: ஞானகாரகன் ஆன கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரம், புத்திகாரகன் ஆன குருவின் வீட்டில் உள்ளது”

'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!
'கேதுவின் ஞானமும்! குருவின் புத்தியும் ஒருங்கே பெற்றவர்கள்!’ மூலம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

மூலம் நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு நன்மைகள் நிறைய செய்யும் பண்பு கொண்டவர்கள் ஆனால் அவர்களை அவர்கள் வீட்டில் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாக இருக்கும். சில நேரங்களின் தங்களின் கருத்தை ஆணித்தனமாக எடுத்து வைப்பார்கள். யார் எடுத்து சொல்லாலும் அதனை மாற்றிக்கொள்ளமாட்டார்கள். 

இவர்களுக்கு கோபம் சீக்கிரமாக வந்தாலும், அது வந்த வேகத்தில் தணிந்துவிடும். சமூகசேவை மீது ஆர்வம் கொண்ட இவர்களுக்கு கல்வியில் சற்று குறைந்தே இருக்கும். ஆனாலும் அவர்களின் உலக அறிவு மிக சிறந்ததாக இருக்கும். 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சில நேரங்களில் தங்கள் குருவையே உதாசினப்படுத்தும் சூழல் உண்டாகலாம். 

தாம்பத்தியம், சிற்றின்பங்களில் ஈடுபாடு இருந்தாலும், நாளடைவில் இவர்கள் ஞானத்தேடலில் ஈடுபடுவார்கள். 

மூலம் நட்சத்திரக்காரர்களின் பாதவாரியான பலன்கள்!

மூலம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கோபத்தால் சமூகத்தில் கெட்டப்பெயர் வாங்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மிக கவனமாக இருக்க வேண்டும். 

மூலம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது பற்றும், செல்வமும் தானாக வந்து சேரும். 

மூலம் நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாதில் வெல்லும் தர்க்க திறமை உண்டு.

மூலம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் இருப்பவர்கள் சந்தோஷமே குறிக்கோளாக கொண்டு லௌகீக சுகங்களில் ஆர்வம் காட்டுவார்கள். 

மூலம் நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை!

ராட்ச கணமான மூலம் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்காக ஆண் நாயும், உரிய மரமாக மறாமரமும், உரிய பறவையாக செம்பருந்து பறவையும் உள்ளது. 

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருவள்ளூருக்கு அருகே உள்ள மப்பேடு எனும் ஊரில் அமைந்து உள்ள சிங்கீஸ்வரர் கோயிலை வழிபட்டு வர அனுகூலங்கள் கூடும், மேலும் மூலம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகே உள்ள சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்து வர நன்மைகள் கிடைக்கும். 

மூலம் நட்சத்திரத்தில் மிருதி என்ற அஷ்டதிக் பாலகர் பிறந்து உள்ளதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. 

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி தரும் தசைகள்

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக கேது மகா தசை வருகிறது. மேலும் இவர்களுக்கு, சுக்கிர மகா தசை, சந்திர மகா தசை, ராகு மகா தசை, சனி மகா தசை, புதன் மகா தசை ஆகிய தசைகள் அனுகூலம் தருவதாக அமைகிறது. 

வசிய நட்சத்திரம்!

மூலம் நட்சத்திரத்தின் வசிய நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. இவர்கள் கணவன், மனைவிகளாக இணைந்தால் மகிழ்ச்சியான இல்லற வாழ்கையை மேற்கொள்வார்கள். 

அனுகூலம் தரும் நட்சத்திர நாட்கள்!

மேலும், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூரம், பூராடம், பரணி, ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுசம், உத்ரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றி கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்

WhatsApp channel