தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magham Nakshatram: ‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

Magham Nakshatram: ‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 13, 2024 04:22 PM IST

”மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்ற பழமொழி உண்டு. அதாவது ஆளுமை கொண்ட கிரமாக சூரியனும், ஞானம் பெற்ற கேதுவும் சேரும்போது ராஜாவாக வாழ முடியும் என்பது இதற்கு பொருளாகும்”

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!
‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!

பெருந்தன்மை குணம் கொண்ட மகம் நட்சத்திரம்

அதாவது ஆத்மா ஞானத்துடன் கலக்கும் நிகழ்வு மகம் நட்சத்திரக்காரர்களுக்கு இயற்கையிலேயே உள்ளது.  பெருந்தன்மை குணம் கொண்ட இவர்களுக்கு எதனை பற்றியும் தனிப்பட்ட அக்கரை இருக்காது.  சமுதாய நோக்கம் கொண்ட இவர்களுக்கு இசையில் அதிக நாட்டம் இருக்கும். 

மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்

கடவுள் மீதான பயம் இவர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும். நினைத்ததை முடிக்கக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

’மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்ற பழமொழி உண்டு. அதாவது ஆளுமை கொண்ட கிரமாக சூரியனும், ஞானம் பெற்ற கேதுவும் சேரும்போது ராஜாவாக வாழ முடியும் என்பது இதற்கு பொருளாகும். 

பூக்கள், மரம்,செடி, கொடிகள் உள்ளிட்ட இயற்கை மீதான ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும், தூங்குவதில் பெரிய ஆர்வம் காட்டாத இவர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள்.

மகம் நட்சத்திரத்தின் விலங்கு! பறவை!  

ராட்சத கணத்தை சேர்ந்த ஆண் நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்காக ஆண் எலி உள்ளது. உரிய விருட்சமாக ஆலமரமும், உரிய பறவையாக ஆண் கழுகும் உள்ளது. 

மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள்

இந்த நட்சத்திரத்திற்கு உரிய தலமாக திண்டுக்கல் அருகே உள்ள விராலிப்பட்டி எனும் ஊரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. மகம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு மேற்கொண்டு வர அனுகூலங்கள் கிடைக்கும்.  

மகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் பிறந்ததாக புராண வரலாறு உள்ளது.  பித்ருக்களுக்கு உரிய நட்சத்திரமாக மகம் நட்சத்திரம் உள்ளது. 

மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான தசை

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு  முதல் தசையாக கேது மகா தசை வருகிறது. இரண்டாவது தசையாக சுக்கிர  மகா தசை வருகிறது. 

மகம் நட்சத்திரக்கார்களுக்கு இளமை காலங்களில் சுக்கிர தசை வருவதால் தவறான வழிகளில் செல்ல வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர மகா தசை; சுக்கிர புத்தி, சந்திர மகா தசை; சந்திர புத்தி, ராகு மகா தசை; ராகு புத்தி, சனி மகா தசை; சனி புத்தி, புதன் மகா தசை; புதன் புத்தி அனுகூலமான பலன்களை தர வாய்ப்புக்கள் உள்ளன. 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான வசிய நட்சத்திரமாக பூரம் நட்சத்திரம் உள்ளது. இவர்கள் வாழ்கையில் இணைந்தால் அன்னோன்யம் மிக்கதாக இருக்கும். 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி, பூராடம், பூரம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், அனுசம், உத்ரட்டாதி, பூசம், ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்கள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel