Kettai Nakshatram: ‘கோட்டையை ஆளும் இந்திரன் பிறந்த நட்சத்திரம்’ கேட்டை நட்சத்திர பொதுப்பலன்கள்!
”கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் விளையாட்டுத்துறை சார்ந்ததாக இருக்கும்”
புதனுக்குரிய அறிவுக்கூர்மையும், செவ்வாய்க்கு உரிய உடல் பலமும் இவர்களுக்கு இணைந்து இருக்கும்.
இதனால் இவர்கள் விளையாட்டு துறையில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் நடை, உடை, பாவனைகள் அனைத்தும் விளையாட்டுத்துறை சார்ந்ததாக இருக்கும்.
பயணப்பிரியர்களான இவர்கள், எப்போதும் மகிழ்ச்சியாக குறும்பு செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இயற்கையிலேயே கலை ஆர்வம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். உடன் பிறப்புகளை அதிகம் நேசிக்கும் இவர்களுக்கு அடிக்கடி கோபம் வரும்.
பொய்யை கூட கற்பனை கலந்து பேசி மற்றவர்களை கவருவதில் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
பாத வாரியான பலன்கள்
கேட்டை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலி தனமும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தன்மையும் இயல்பிலேயே இருக்கும்.
கேட்டை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பணம் விஷயத்தில் அதிக கவனமாக இருந்து செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.
கேட்டை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புகழ் தேடி வரும்.
கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு துருதுருவென இருப்பார்கள். கேட்டை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக கவனமுடம் வாழ்வது அவசியம்.
விருச்சிகம் ராசியில் செவ்வாய் கால புருஷனுக்கு 8ஆவது ராசியாக வருவதால் புலனாய்த்துறை சார்ந்த துறைகளில் அதிக ஆர்வம் கொண்டு இருப்பார்கள்.
ராட்சகணம் பொருந்திய கேட்டை நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக உள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு புள்ளி மான், உரிய விருட்சம் பாராய் மரம், உரிய பறவை சக்கரவான பறவை உள்ளது.
கேட்டையில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பசுபதி கோயில் அருகே உள்ள வரதராஜ பெருமாளை வணங்கி வர அனுகூலங்கள் கிடைக்கும். மேலும் கேட்டை நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்து வர நற்பலன்களை பெற முடியும்.
கேட்டை நட்சத்திரத்தில் இந்திரன், வராக பெருமாள் ஆகியோர் பிறந்ததாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
அனுகூலமான தசைகள் மற்றும் புத்திகள்!
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக புதன் மகா தசை வருகிறது. முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 14 ஆண்டுகளும், இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 10 ஆண்டுகளும் புதன் மகா தசை வரும். கேட்டை மூன்று மற்றும் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் படிப்பில் மிக அதிகமாக கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது மகாதசை; கேது புத்தி, சூரிய மகாதசை; சூரிய புத்தி, செவ்வாய் மகாதசை; செவ்வாய் புத்தி, குரு மதாதசை; குரு புத்தி மற்றும் சனி மகாதசை; சனி புத்தி ஆகியவை அனுகூலங்களை தரும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசிய நட்சத்திரமாக அனுஷம் நட்சத்திரம் உள்ளது. இவர்கள் கணவன், மனைவியாக இணையும் போது ஆதர்ஷ தம்பதிகளாக விளங்குவார்கள்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, மகம், மூலம், உத்திரம், கிருத்திகை, உத்ராடம், மிருகசீரிசம், அவிட்டம், சித்திரை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுசம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் கால கட்டத்தில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றி கிடைக்கும்.