தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Karthigai Nakshatram: ’முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்!’ கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Karthigai Nakshatram: ’முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்!’ கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 24, 2024 09:42 PM IST

Karthigai Nakshatram: கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் பெரிய பதவிகளுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு. சாதூர்யமான இவர்களின் பேச்சு எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். எதிரிகளை அவர்களது வழிக்கே சென்று அடக்க கூடிய தன்மையை கிருத்திகை நட்சத்திரக்கார்கள் பெற்று உள்ளனர்.

’முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்!’ கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!
’முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்!’ கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுப்பலன்கள்!

எதிரிகளை அடக்குவதில் வல்லவர்கள் 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தில் பெரிய பதவிகளுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு. சாதூர்யமான இவர்களின் பேச்சு எல்லோருக்கும் பிடித்ததாக இருக்கும். எதிரிகளை அவர்களது வழிக்கே சென்று அடக்க கூடிய தன்மையை கிருத்திகை நட்சத்திரக்கார்கள் பெற்று உள்ளனர். 

சூரிய பகவானின் பராக்கிரமம் கொண்ட இவர்கள், எப்படிப்பட்ட எதிரிகளையும் லாவகமாக சமாளிப்பார்கள். இவர்கள் பேச்சு சூடாக இருந்தாலும், அதில் உண்மை இருக்கும். எல்லோரையும் சமமாக பாவிக்கும் பண்பு இவர்களுக்கு உண்டு. 

கிருத்திகை நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள் 

கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் ஞான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டு விளங்குவார்கள். 

கிருத்திகை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் செய்யும் தொழிலை கடவுளாக பாவித்து செய்யக்கூடியவர்கள்.

கிருத்திகை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் செய்யும் வேலையை மிக எளிதாக செய்து அதில் பெரும் லாபத்தை அடையும் திறமை படைத்தவர்கள். 

கிருத்திகை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் ஆவார்.

முருகப்பெருமான் பிறந்த நட்சத்திரம்  

முருகப்பெருமான் கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால்தான் அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயர் அமைய பெற்றதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. 

கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதியான சூரிய பகவான் செவ்வாய் பகவானின் மேஷம் ராசியில் பிரவேசம் செய்கிறார். 

செவ்வாயும் சுக்கிரனும் 

சூரியனின் வீரம், பராக்கிரமம், சந்தோஷம், தைரியம், செல்வாக்கு ஆகிவையும், செவ்வாயின் அதிகாரமும், கோபமும் கிருத்திகை முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பான குணங்களாக இருக்கும். 

கிருத்திகை இரண்டு, மூன்று, நான்காம் பாதங்கள் சுக்கிரனின் ரிஷபம் ராசியில் அமைவதால், சுக்கிரனின் சுபத்துவங்கள் உடன் சூரியனின் வீரம், பராக்கிரமம், சந்தோஷம், தைரியம், செல்வாக்கு ஆகிவை கிருத்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களின் இயல்பாக இருக்கும். 

கிருத்திகை நட்சத்திரம் இரண்டு ராசிகளில் வருவதால் இந்த நட்சத்திரத்தை காலற்ற நட்சத்திரம் என வகைப்படுத்துகின்றனர். 

கிருத்திகை நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை 

ராட்ச கணம் பொருந்திய கிருத்திகை நட்சத்திரம் ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் விலங்காக ஆடு உள்ளது. இந்த நட்சத்திரத்தின் விருட்சமாக அத்தி மரமும், பறவையாக மயிலும் உள்ளது. இந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதையாக அக்னி பகவான் உள்ளார். 

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கார்த்த சுந்தரேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்ய நன்மைகள் கிடைக்கும். ஆனாலும் கிருத்திகை நட்சத்திரக்கார்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் சிவாலயங்ககளில் வழிபாடு செய்ய அனுகூலங்கள் கிடைக்கும். 

அனுகூலம் தரும் தசைகள் 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சூரிய தசை வருகிறது. சந்திர தசை, ராகு தசை, சனி தசை, கேது தசை, சுக்கிர தசைகள் இவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தி தரும். 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், அஸ்வினி, பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் புதிய செயல்களை தொடங்க நன்மைகள் கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசிய நட்சத்திரமாக பூசம் நட்சத்திரம் உள்ளது.

WhatsApp channel