Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Barani Nakshatram: ‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
Published May 16, 2024 03:53 PM IST

“Barani Nakshatram: பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்’ என்ற பழமொழி இவர்களுக்குரிய சிறப்பை வெளிப்படுத்துகிறது”

‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!
‘பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியுமா?’ பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

பரணி நட்சத்திரமும் அதிபதிகளும்!

சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரம் செவ்வாய் பகவானின் மேஷ ராசியில் முழு நட்சத்திரமாக வருகிறது. 

’பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம்’ என்ற பழமொழி இவர்களுக்குரிய சிறப்பை வெளிப்படுத்துகிறது. 

பரணி நட்சத்திரத்தின் குணநலன்கள்!

எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் வரை இவர்களது எண்ணங்களை சிதறவிடமாட்டார்கள்.  பிடிவாதக்காரர்களான இவர்களுக்கு வாக்கு சாதூர்யமும், பிடிவாத குணமும் உண்டு. 

புத்திசாலிதனமாக நடந்து கொள்ளும் இவர்களுக்கு ஆன்மீக தொண்டுகளில் நாட்டம் அதிகமாக இருக்கும். இதற்கான கடின விரதங்களையும் மேற்கொள்வார்கள். 

வாழ்கையை மகிழ்ச்சியாக வாழ பிறந்தவர்களான பரணி நட்சத்திரக்காரர்கள், பெற்றோர்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். 

பெண்களை மதிக்கும் உயர்ந்த பண்பு கொண்ட இவர்களுக்கு செல்வ செழிப்பில் சிறப்பான நிலையை தங்கள் வாழ்கையில் அடைவார்கள்.

சுக்கிரனின் சுபிட்சமும்! செவ்வாயின் பராக்ரமும்!

சுக்கிரனின் சுபிட்சங்களும், செவ்வாயின் வீர பராக்கரமும் இணைந்து இருப்பவர்களாக பரணி நட்சத்திரக்காரர்கள் விளங்குவார்கள்.

பரணி நட்சத்திரத்தின் பாதவாரியான பலன்கள்!

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த வீரம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு பொறுமை இருக்காகது. 

பரணி இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியும், பொறுமையும் நிறைந்து காணப்படுவார்கள். கல்வியில் அதிக ஆர்வம் கொண்டு விளங்குவார்கள். 

பரணி மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வாழ்கையை சுகபோகமாக அனுபவிக்கக்கூடியவர்கள்.

பரணி நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் நெளிவு சுளிவுத்திறன் கொண்டவர்களாக விளங்குவார்கள். 

பரணி நட்சத்திரத்தின் விலங்கு, மரம், பறவை 

மனுஷ கணம் பொருந்திய பரணி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக விளங்குகிறது. பரணி நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் யானை உள்ளது. உரிய விருட்சம் நெல்லி மரம், உரிய பறவை காகம் உள்ளது.  பரணி நட்சத்திரத்தின் அதிபதியாக துர்கா தேவி உள்ளார். 

பரணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நாகப்பட்டினம் அருகில் உள்ள நல்லாடை அக்னீஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்து வர நன்மைகள் கிடைக்கும். 

அதுமட்டுமின்றி பரணி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்து வர நன்மைகளை பெற முடியும். 

பரணிக்கு அனுகூலம் தரும் தசைகள்

பரணி முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர மகா தசை வருகிறது. இவர்களுக்கு சூரிய தசை, செவ்வாய் தசை, குரு மகா தசை, புதன் மகா தசை, கேது தசைகள் நற்பலன்களை கொடுக்கும். 

இந்த நட்சத்திரத்தின் வசிய நட்சத்திரமாக ரேவதி நட்சத்திரம் உள்ளது. 

கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், ரேவதி, கேட்டை, மூலம், மகம், அஸ்வினி நட்சத்திர நாட்களில் பரணி நட்சத்திரக்காரர்கள் புதிய செயல்களை தொடங்கினால் நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner