தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ayilyam Nakshatram: ‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

Ayilyam Nakshatram: ‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 25, 2024 05:10 PM IST

Ayilyam Nakshatram: அறிவுக்கு காரகன் ஆன புதன் பகவானின் நட்சத்திரம் ஆன ஆயில்யம் நட்சத்திரம் மதிக்கு காரகன் ஆன சந்திரன் வீட்டில் இருப்பதால் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுத்தெளிவும், மதிநுட்பமும் கொண்டு விளங்குவார்கள்

‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!
‘புதனின் அறிவும், சந்திரனின் மதிநுட்பமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ ஆயில்யம் நட்சத்திர பொதுப்பலன்கள்!

புதனின் அறிவும், சந்திரனின் மதியும் 

அறிவுக்கு காரகன் ஆன புதன் பகவானின் நட்சத்திரம் ஆன ஆயில்யம் நட்சத்திரம், மதிக்கு காரகன் ஆன சந்திரன் வீட்டில் இருப்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுத்தெளிவும், மதிநுட்பமும் கொண்டு விளங்குவார்கள். 

சிக்கனமும் சேமிப்பு பண்பும் கொண்ட ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு பிரியமானவர்களாக இருப்பார்கள். பலசாலிகளான இவர்களின் செயல்பாடுகள் எதிரிகளையும் நேசிக்க வைப்பதாய் அமையும். 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறிது சுயநலம் எப்போதும் இருக்கும். ஆயில்யம் நான்காம் பாதம் கண்டாந்திர நட்சத்திர பாதங்களில் ஒன்றாக வருவதால் வாழ்கையில் எச்சரிக்கை உடன் இருப்பது மிக அவசியம் ஆகும். 

ஆயில்யம் நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை

ராட்சத கணம் பொருந்திய ஆயில்யம் நட்சத்திரம் ஆண் நட்சத்திரம் ஆகும். இதன் விலங்கு ஆண் பூனை, இதன் விருட்சம் புன்னை மரம், இதன் பறவை கிச்சிளி பறவை ஆகும். 

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருதேவன் குடி எனும் ஊரில் அமைந்துள்ள கற்கடகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட சகல நன்மைகளும் கிட்டும். ஆனாலும், ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் கோயிலில் வழிபாடுகள் நடத்தி வர அனுகூலங்கள் கிடைக்கும். 

ஆயில்யம் நட்சத்திரத்தின் தேவதையாக ஆதிசேஷன் உள்ளார் என்பதால் இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம் இருக்கும். ஒருவர் செய்த நல்லது ஆனாலும் கெட்டது ஆனாலும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் நன்றாக நினைவில் வைத்து இருப்பார்கள். இதுவே இவர்களுக்கு பிரச்னைகளையும் ஏற்படுத்தலாம்.  

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலம் தரும் தசைகள் 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக புதன் மகா தசை வருவதால், இயற்கையிலேயே புத்திசாலித்தனம் பொருந்தியவர்களாக விளங்குவர். அடுத்ததாக கேது தசை இவர்களுக்கு வருவதால் கல்வி பயிலும் காலங்களில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஜோதிடர் அஸ்ட்ரோ பாலா கூறுகிறார்.  

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது மகாதசை, சூரிய தசை, செவ்வாய் தசை, குரு தசை, சனி தசை ஆகியவை அனுகூலங்களையும், நற்பலன்களையும் தரும். இந்த நட்சத்திரத்தின் வசிய நட்சத்திரமாக புனர்பூசம் நட்சத்திரம் உள்ளது. 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிசம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, அனுசம், உத்திரட்டாதி, பூசம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் நன்மைகள் கிட்டும். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel