தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Avitam Nakshatram: ’தவிட்டு பானையை தங்கம் ஆக்குவார்கள்!’ அவிட்டம் நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

Avitam Nakshatram: ’தவிட்டு பானையை தங்கம் ஆக்குவார்கள்!’ அவிட்டம் நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Apr 20, 2024 05:30 PM IST

”அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும்”

அவிட்ட நட்சத்திர பலன்கள்
அவிட்ட நட்சத்திர பலன்கள்

பாதி நட்சத்திரம் மகரத்திலும், மீதி கும்ப ராசியிலும் இந்த நட்சத்திரம் உள்ளதால் இது உடலற்ற நட்சத்திரமாக கணக்கில் கொள்ளப்படுகிறது. 

மகரம் மற்றும் கும்பம் ராசிகள் சனி பகவானின் ஆட்சி பெற்ற ராசிகளாக உள்ளதால் அவிட்டம் நட்சத்திரம் முழுவதும் சனியின் வீடான ராசியில் மட்டுமே வருகிறது. 

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ’தவிட்டு பானை எல்லாம் தங்கமாக இருக்கும்’ என்பவார்கள். ஜீவன ஸ்தானமான மகர ராசியில் பிறந்தவர்கள் உழைப்புக்கு முக்கியத்துவம் தருவார்கள். உழைப்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக செல்வத்தை பெற முடியும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களால் பசி தாங்க முடியாது. ஆனாலும் கொஞ்சமாக சாப்பிடக்கூடியவர்கள். 

கம்பீரத் தோற்றத்தை கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் கர்வம் இவர்களிடம் இருக்கும்.  

பெண்களிடம் இவர்களுக்கு மோகம் இருக்கும். ஒருவரை பார்த்த உடனே அவர்களை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஒருவர் மீது இவர்களுக்கு நம்பிக்கை வந்தால், அவர்களை அருகிலேயே வைத்துக் கொள்வார்கள். ஆனால் நம்பிக்கை வரவில்லை என்றால் அவர் மகாபுத்திசாலியாக இருந்தாலும், அவரை அருகில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். 

இந்த நட்சத்திரக்காரர்கள் இசைப்பிரியர்களாக இருப்பார்கள். 

அவிட்ட நட்சத்திரம் ராட்சஷ கணம் பொருந்திய நட்சத்திரம் ஆகும் என்பதால் இவர்களுக்கு அதிகாரத் தோரணை இருக்கும். இந்த நட்சத்திரத்தின் விலங்காக பெண் சிங்கமும், விருட்சமாக வன்னி மரமும், பறவையாக பொன் வண்டும் உள்ளது. 

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூருக்கு அருகே உள்ள கீழக்கொளுக்கை கிராமத்தில் உள்ள பிரம்ம ஞானபுரிஸ்வரரை வழிபடுவது சிறப்பு ஆகும். அதே வேலையில் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள சிவாலயங்களில் வழிபாடு செய்வதும் சிறப்புத்தான். 

அனந்த சயண பெருமாள் மற்றும் அஷ்ட வசுக்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்ததாக புராண வரலாறுகள் உண்டு. 

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக செவ்வாய் தசை வரும். இவர்களின் வசிய நட்சத்திரமாக பூராட்டாதி நட்சத்திரம் உள்ளது. 

இந்த இரு நட்சத்திரக்காரர்கள் வாழ்வில் இணையும் போது சிறப்பான தம்பதிகளாக இருப்பார்கள்.  

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை, ராகு புத்திகள், சனி மகாதிசை சனி புத்திகள், கேது மகாதிசை கேது புத்திகள், சூர்ய மகாதிசை சூரிய புத்திகள், சந்திர மகாதிசை சந்திரபுத்திக்கள் அதிகமான நற்பலனை கண்டிப்பாக ஏற்படுத்தி வருவார்கள். 

இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்ரட்டாதி, நட்சத்திர நாட்களில் நல்ல செயல்களை தொடங்கினால் வெற்றி உறுதி ஆகும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்