Ashwini Nakshatram: எதிலும் குதிரை போல் செயல்படுவார்கள்! அஸ்வினி நட்சத்திரத்தின் பொது பலன்கள்!
Ashwini Nakshatram: தேவ கணத்தை சேர்ந்த அஸ்வினி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக வகைப்படுத்த படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் எட்டி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய பறவை ராஜாளி பறவையாகவும் உள்ளது.

இது போன்ற போட்டோக்கள்
Mar 18, 2025 10:08 PMSani puthan luck: நண்பர்கள் மூலம் ஏமாற்றம்.. திருமண கசப்பு.. சனி புதன் சேர்க்கை பலன்கள் என்னென்ன தெரியுமா?
Mar 18, 2025 06:10 PMசூரியன் மீனம்: கூரைய பிச்சிகிட்டு பணம் கொட்டப் போகும் ராசிகள்.. சூரியன் மீனத்தில் நுழைந்தார்.. இதுல எது உங்க ராசி?
Mar 18, 2025 03:00 PMசுக்கிரன் யோகம்: கொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பண யோகத்தில் நனையும் ராசிகள்.. மீன ராசி உதயம்!
Mar 18, 2025 01:14 PMமீன ராசி: துன்பங்கள் துரத்தி துரத்தி அடிக்கும் ராசிகள்.. மீன ராசியில் புதன் அஸ்தமனம்.. கஷ்டப்படும் ராசிகள் யார்?
Mar 18, 2025 11:29 AMஇரண்டு கிரகங்களின் மாற்றம்.. இந்த மூன்று ராசிகளுக்கு அடிக்க போகுது ஜாக்பாட்.. பட்ட கஷ்டம் எல்லாம் அகலும்!
Mar 18, 2025 11:17 AMஇந்த மூன்று ராசிக்கு நிலம், வாகனம் வாங்கும் யோகம் இருக்கு.. உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.. புதனால் ஆதாயம்!
அஸ்வினி நட்சத்திரத்தின் குணநலன்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரிய சாலிகளாகவும், நேர்மை ஆனவர்களாகவும் விளங்குவார்கள். இவர்களுக்கு தர்ம சிந்தனை அதிகமாக இருக்கும்.
எடுத்த வேலைகளை எந்த குறையும் வைக்காமல் வெற்றிகரமாக இவர்களால் செய்ய முடியும். கோபகாரர்களான இவர்கள் தைரியமும், வீரியமும் பெற்றவர்களாக விளங்குவார்கள். எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் பராக்கிரமம் இவர்களுக்கு இருக்கும். அறிவுக்கூர்மை மிக்க இவர்களுக்கு சுயமரியாதை உணர்வு கூடுதலாக இருக்கும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் பாத வாரியான பலன்கள்
அஸ்வினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஞானமும், கோபமும் அதிகம் இருக்கும்.
அஸ்வினி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செல்வ செழிப்பு ஏராளமாக இருக்கும்.
அஸ்வினி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி, ஞானம் அதிகமாக இருக்கும்.
அஸ்வினி நட்சத்திரம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சௌகரியமான வாழ்கை இயற்கையாக அமையும்.
அஸ்வினி நட்சத்திரத்தின் விலங்கு, விருட்சம், பறவை
தேவ கணத்தை சேர்ந்த அஸ்வினி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக வகைப்படுத்தப்படுகிறது. இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு ஆண் குதிரை ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் எட்டி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய பறவை ராஜாளி பறவையாகவும் உள்ளது.
அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதியாக சரஸ்வதி உள்ளார். அஸ்வினி நட்சத்திரத்தின் வசிய நட்சத்திரமாக சதயம் நட்சத்திரம் உள்ளது.
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருத்துறைப்பூண்டியில் உள்ள மருந்தீஸ்வர் கோயிலில் வழிபாடு செய்வது நன்மைகளை தரும். மேலும், அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்து வர அனுகூலங்கள் ஏற்படும்.
அஸ்வினி நட்சத்திரத்திற்கு அனுகூலம் தரும் தசைகள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக கேது தசை வருகிறது. அடுத்த தசையாக சுக்கிர தசை வருகிறது.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை, சந்திர தசை, ராகு தசை, சனி தசை, புதன் தசை ஆகியவை நற்பலன்களை வழங்குவதாக உள்ளது.
அனுகூலம் தரும் நட்சத்திரங்கள்
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம், சுவாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிட்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:-
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
