Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!
”நிறைய பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களான இவர்கள் சிரித்தால் கலையாக இருப்பார்கள்”
ஸ்ரீ மகாலட்சுமி பிறந்த நட்சத்திரக்காரர்கள், அமைதியே முழு உருவமாக இருப்பார்கள். எந்த காரியத்தையும் அலட்டிக்கொள்ளாமல் முடிப்பார்கள்.
தாய் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்ட இவர்களுக்கு, ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மிகுந்த ஈடுபாடுகள் இருக்கும்.
நட்புக்கரம் நீட்டும் இவர்கள் தைரியமானவர்கள், சுயாதீனமானவர்கள் மற்றும் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கும் தன்மை கொண்டவர்கள். கலை, இசை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.
எதிர்காலத்தில் அதிக செல்வம் சேர்க்கவும், வெளிநாட்டில் வசிக்கும் அதிக வாய்ப்புகள் இவர்களுக்கு உண்டு.
நிறைய பயணம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களான இவர்கள் சிரித்தால் கலையாக இருப்பார்கள்.
அதிர்ந்து பேசாத தன்மை கொண்ட இவர்கள், வருங்காலத்தில் பெரிய பதவிகளுக்கு செல்வார்கள். சகோதர வகையில் சில துரோகங்கள் ஏற்பட இவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு.
இசைக் கருவிகளை வாசிப்பது, இசை கேட்பது, மந்திரங்கள் ஓதுவதில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.
அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
அனுஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் தானுண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள்.
அனுஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் வசதியான வாழ்கையை வாழ்வார்கள்.
அனுஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் தியானம் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.
தேவ கணம் பொருந்திய நட்சத்திரமான அனுஷம், பெண் நட்சத்திரம் ஆகும். இதன் விலங்கு மான், இதன் விருட்சமாக மகிழம் மரமும், இதன் பறவையாக வானபாடி பறவையும் உள்ளது.
நாகப்படினம் அருகில் திருநின்றியூர் மகாலட்சுமி ஈஸ்வரர் கோயிலில் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய நன்மைகள் கிடைக்கும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகே உள்ள சிவன் அல்லது திருமால் ஆலயங்களில் வழிபாடு மேற்கொள்வது நன்மைகளை பெற்றுத்தரும்.
அனுசஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சனி மகா தசை வருகிறது. இதனால் இடர்களை எதிர்கொள்ளக்கூடிய பக்குவம் இயல்பிலேயே வந்துவிடுகிறது.
புதன் தசை; புதன் புத்தி, சுக்ரதசை; சுக்ரபுத்தி, சந்திர தசை; சந்திர புத்தி, ராகு தசை; ராகு புத்தி, குரு தசை; குரு புத்தி ஆகிய காலங்கள் அதிக நற்பலன்களை பெற்றுத்தரும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு வசிய நட்சத்திரமாக கேட்டை நட்சத்திரம் உள்ளது.
கேட்டை, ரேவதி, ஆயில்யம், பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், திருவாதிரை, சுவாதி, பூரட்டாதி, விசாகம், புணர்பூசம் நட்சத்திர நாட்களில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய செயல்களை தொடங்கினால் வெற்றிகள் கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற் பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதில் இருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்து கொள்ள வேண்டும். மற்றபடி இதில் இருந்து பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.