தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Graga Malika Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Graga Malika Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil
Jun 14, 2024 05:40 AM IST

Graga Malika Yogam: குறைந்தபட்சம், 6 முதல் 8 வீடுகளுக்கு கிரங்கள் மாலையாக அமையும்போது, ’கிரக மாலிகா’ யோகம் ஏற்படுகிறது. 6 வீடுகளுக்கும் குறைவாக கிரகங்கள் அமையும் போது ’கிரக மாலிகா’ யோகம் கணக்கில் எடுத்துக் கொள்ளபடாது.

Graga Malika Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!
Graga Malika Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ ராஜாவுக்கு ராஜா ஆக்கும் கிரக மாலிகா யோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன.

கிரக மாலிகா யோகம் எப்படி உண்டாகிறது?

கிரகங்கள் ஒன்றை ஒன்று கோர்த்தது போல் அமைய பெறும்போது, கிரக மாலிகா யோகம் உண்டாகிறது.

9 கிரகங்களும் தனித்தனியாக அமையபெற்றால் அந்த நபர் சக்ரவர்த்தி ஆவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. மாபெரும் யோகம் கொண்டவர்களுக்குதான் இந்த அம்சம் கிடைக்கும். 

குறைந்தபட்சம், 6 முதல் 8 வீடுகளுக்கு கிரங்கள் மாலையாக அமையும்போது, ’கிரக மாலிகா’ யோகம் ஏற்படுகிறது. 6 வீடுகளுக்கும் குறைவாக கிரகங்கள் அமையும் போது ’கிரக மாலிகா’ யோகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

சூல யோகம்

குறைந்துபட்சம் 3 முதல்  4 கிரகங்களும் அடைப்பட்டு இருப்பது சூல யோகம் என வரையறுக்கப்படுகின்றது. உதாரணமாக லக்னத்தில் ராகுவும், 6ஆம் இடத்தில் 3 கிரகங்கள், 7ஆம் இடத்தில் 4 கிரகங்கள், 8ஆம் இடத்தில் ஒரு கிரகம் அமையும் போது சூல யோகம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. 

யோகம் ஏற்படுத்தும் நற்பலன்கள்

இந்த யோகம் மூலம் ஒன்றை ஒன்று கிரங்கள் இடையூறு செய்யாமல், அதன் இயல்பில் அதன் வேலையை செய்யும் நிலை ஏற்படும். இதனால் அந்த கிரகங்கள் தரும் பலன்கள் பாதிப்புகள் ஏதுமின்றி முழுமையாக கிடைக்கும். 

இதனால் ஜாதகர் தனவானாகவும், யோகவானாகவும், வாழ்கையில் அனைத்து சௌபாக்கியங்களையும் தரும் யோகவானாகவும் இருப்பார். 

நவரத்ன மாலிகா யோகம்

எந்த யோகமும் செயல்பட வேண்டும் என்றாலும், லக்னாதிபதி வலுப்பெற்று இருப்பது அவசியம் ஆகிறது. அதன் அடிப்படையில் லக்னம் முதல் அடுத்த 9 வீடுகளில் தொடர்ச்சியாக அனைத்து கிரகங்களும் அடங்கி இருந்தால், இதனை ’நவரத்ன மாலிகா யோகம்’  உண்டாகிறது. இதனை ‘லக்ன மாலிகா யோகம்’ என்றும் குறிக்கப்படுகின்றது. இந்த யோகம் பெற்ற ஜாதகர், அரசனுக்கெல்லாம் அரசனாக விளங்குவார் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றது. 

தன மாலிகா யோகம் 

உங்கள் லக்னத்தின் இரண்டாம் வீட்டில் இருந்து அடுத்து உள்ள 9 வீடுகளுக்கு கிரக மாலிகா யோகம் ஏற்பட்டால், தன மாலிகா யோகம் என இது குறிக்கப்படுகின்றது. இதில் ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பு ஏற்பட்ட பின்னர், பொருளாதாரத்தில் மிகப்பெரும் வெற்றிகளை குவிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். 

தைரிய மாலிகா யோகம் 

லக்னத்திற்கு 3ஆம் இடத்தில் இருந்து கிரகங்கள் தொடர்ச்சியாக இருந்தால், தைரிய மாலிகா யோகம் உண்டாகிறது. துணிச்சல் மிக்க செயல்களில் ஜாதகர் ஈடுபட்டு வாழ்கையில் மிகப்பெரிய வெற்றிகளை ஜாதகர் பெறுவார். 

 

 

 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்