Surya Bhagavan Luck: குதிரை ஏறி வரும் சூர்யபகவான்.. 3 ராசிகளுக்கு தர்ம அடி..பேரதிஷ்டம் பெறும் இதர ராசிகள் யார் யார்?-be cautious with the 3 signs starting on august 16 surya bhagavan will bring prosperity to these 5 zodic signs - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Surya Bhagavan Luck: குதிரை ஏறி வரும் சூர்யபகவான்.. 3 ராசிகளுக்கு தர்ம அடி..பேரதிஷ்டம் பெறும் இதர ராசிகள் யார் யார்?

Surya Bhagavan Luck: குதிரை ஏறி வரும் சூர்யபகவான்.. 3 ராசிகளுக்கு தர்ம அடி..பேரதிஷ்டம் பெறும் இதர ராசிகள் யார் யார்?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 13, 2024 04:14 PM IST

Surya Bhagavan Luck: சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரலாம். உங்கள் வர்த்தக நிலை வலுவாக இருக்கும். - பேரதிஷ்டம் பெறும் ராசிகள்

Surya Bhagavan Luck: குதிரை ஏறி வரும் சூர்யபகவான்.. 3 ராசிகளுக்கு தர்ம அடி..பேரதிஷ்டம் பெறும் இதர ராசிகள் யார் யார்?
Surya Bhagavan Luck: குதிரை ஏறி வரும் சூர்யபகவான்.. 3 ராசிகளுக்கு தர்ம அடி..பேரதிஷ்டம் பெறும் இதர ராசிகள் யார் யார்?

மேஷம்: சூரிய பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தரும். தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். தொழிலில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும். வியாபார சூழ்நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடல் நலத்தில் பிரச்சினை உள்ளவர்கள் படிப்படியாக அதில் இருந்து விடுபடுவீர்கள்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை சூரியனின் பெயர்ச்சியால் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் ஒரு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். திடீரென்று, பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் அமையும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.

மிதுனம்: சிம்ம ராசியில் சூரியனின் பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரலாம். உங்கள் வர்த்தக நிலை வலுவாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம்: சூரிய பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் குறைக்கும். தொழில் வாழ்க்கையில் சவால்கள் அதிகரிக்கும். பண விரயம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். தேவைக்கு அதிகமாக செலவுகள் செய்ய மனம் அலைபாயும். ஆணவத்தால் பிரச்சினைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

சிம்மம்: சூரியனின் ராசி மாற்றத்திற்குப் பிறகு, பயண வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரத்தால் பணத்திற்கு ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சிலருக்கு பிரேக்-அப் ஏற்படலாம். உடல் நலம் குறித்து மனம் கவலை கொள்ளும்.

கன்னி: சூரிய பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், நீங்கள் நிறைய பணம் பெறுவீர்கள், ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளின் அழுத்தம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாப நஷ்ட நிலை இருக்கும். தொழில் வாழ்க்கையில் போட்டி நிறைந்த சூழ்நிலை நிலவும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள், சூரியனின் பெயர்ச்சியால் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை மேம்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவுகளில் காதல் அதிகரிக்கும். செல்வம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உருவாகும் ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்: சூரிய பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களின் நிலைமையை பிரகாசமாக்கும்.தொழிலில் மகத்தான வெற்றி கிடைக்கும். சமூக கௌரவம் உயரும். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். உறவுகளில் பரஸ்பர புரிதலும், ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

தனுசு: சூரியனின் ராசியில் ஏற்படும் மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரம் விரிவடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். காதல் உறவு நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமையும்.

மகரம்: சூரியனின் பெயர்ச்சியால், மகர ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களில் இருந்து பணவரவு சில பூர்வீகவாசிகள் வேலை மாற திட்டமிடலாம். ஆனால் வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். பல ஆதாரங்களில் இருந்து பணவரவு கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.

கும்பம்: சூரியனின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். உங்கள் தொழில் இலக்குகளை அடைய, நீங்கள் உந்துதல் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவு கிடைக்க புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். மன உளைச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மீனம்: சூரியனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றியைத் தரும். உறவுகளில் பரஸ்பர புரிதலும் ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். ச்வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்பட புதிய வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த நேரத்தில், மனம் ஆரோக்கியத்தைப் பற்றி சிறிது கவலையாக இருக்கலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் தத்தெடுப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்