தமிழ் செய்திகள்  /  Astrology  /  Auspicious Day For Success Today's Horoscope (24.05.2023)

Today Rasi Palan (24.05.2023) : வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் – இன்றைய ராசி பலன் (24.05.2023)

Priyadarshini R HT Tamil
May 24, 2023 06:36 AM IST

12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படியொரு நாளாக அமையும் என்று இன்றைய ராசி பலனில் தெரிந்துகொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

ரிஷபம் - நல்ல நாள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நன்மை கிட்டும். கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். கணவன் - மனைவி உறவு பிற்பகலுக்கு மேல் அன்னியோன்யமாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.

மிதுனம் - இனிய நாள். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறியளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பார்கள். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும், குடும்பத்திலும் மரியாதை உண்டாகும். புதிய சுபகாரிய முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றியடையும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.

சிம்மம் - குடும்ப ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் மனதை ஆட்கொள்ளும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த நாளாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

சிம்மம் - மிகச் சிறந்த நாள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் - மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளையும், புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்துகொள்வர். மாணவர்களின் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை என்றாலும் வெற்றி பெறுவார்கள்.

கன்னி - உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள். உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பல காரியங்கள் வெற்றியடையும். திருமண முயற்சிகள் நன்மையில் முடியும்.

துலாம் - சிறந்த நாள். வாகன வகையில் யோகம் கிட்டும். அரசுத்துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவர். வெளிநாடுகளில் வேலை செய்துகொண்டிருப்பவர்களுக்கு சொத்துக்கள், வாகனம் வாங்குவது போன்ற எண்ணங்கள் தோன்றும். அதில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்து முடித்து நிர்வாகத்தில் நம்பிக்கையையும், நல்ல பெயரையும் பெறுவார்கள்.

விருச்சிகம் - இனிய நாள். வெளியூர்களில், வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி. நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவர். வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பொருளாதார முன்னேற்றத்தை அடைவீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் கிட்டும்.

தனுசு - நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் நல்ல பெயரை நிர்வாகத்தில் பெற வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு இனிமையான நாள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்து வரும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

மகரம் - மிகச்சிறந்த நாள். மாணவர்கள் கல்வியில் மேன்மையை அடைவார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை பெற வழி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மையை அடைவார்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே சென்ற காரியங்கள் வெற்றியில் முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்தி, ஆதாயம் அனுகூலம் கிடைப்பது என்று நல்ல நாளாக செல்லும்.

கும்பம் - நல்ல நாள். சொத்துக்கள், வாகனம் வாங்குவது அல்லது ஒரு சொத்தை விற்று, மற்றொரு சொத்தை வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தொழில் சம்பந்தமாக நீங்கள் இன்று எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளும் நன்மையில் முடியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும்.

மீனம் - வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் நிர்வாகத்தில் நல்ல பெயரைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டு. காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திருமணத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்