August Thulam Rasipalan: வருத்தங்கள் நீங்குமா.. குழம்பித் தெளியும் துலாம் ராசியினரே.. ஆகஸ்ட் மாதம் சொல்லும் கதை இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Thulam Rasipalan: வருத்தங்கள் நீங்குமா.. குழம்பித் தெளியும் துலாம் ராசியினரே.. ஆகஸ்ட் மாதம் சொல்லும் கதை இதோ!

August Thulam Rasipalan: வருத்தங்கள் நீங்குமா.. குழம்பித் தெளியும் துலாம் ராசியினரே.. ஆகஸ்ட் மாதம் சொல்லும் கதை இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 19, 2024 10:52 AM IST

August Thulam Rasipalan: ஒவ்வொரு மாதமும் ஏதாவது நம் வாழ்வில் மாற்றம் வராதா என்று காத்திருக்கும் ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. 2024 ஆகஸ்ட் மாதம் துலாம் ராசியினருக்கு எப்படி என்று அச்சமா.. கவலை வேண்டாம் தொழில் வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

வருத்தங்கள் நீங்குமா.. குழம்பித் தெளியும் துலாம் ராசியினரே.. ஆகஸ்ட் மாதம் சொல்லும் கதை இதோ!
வருத்தங்கள் நீங்குமா.. குழம்பித் தெளியும் துலாம் ராசியினரே.. ஆகஸ்ட் மாதம் சொல்லும் கதை இதோ!

இது போன்ற போட்டோக்கள்

ஒவ்வொரு மாதமும் ஏதாவது நம் வாழ்வில் மாற்றம் வராதா என்று காத்திருக்கும் ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. 2024 ஆகஸ்ட் மாதம் துலாம் ராசியினருக்கு எப்படி என்று அச்சமா.. கவலை வேண்டாம் தொழில் செய்வோருக்கு வாழ்க்கை அமோகமாக இருக்கும்.

பணத்திற்கு பஞ்சமில்லை.

2024ல் துலாம் ராசியின் லக்னாதிபதி, ராசியாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் இருக்கிறார். அதனுடன் புதன் உள்ளார். ராகு கேதுவால் பெரிய அளவில் தொல்லை இல்லை. குறிப்பாக 10ம் இடத்தில் சூரியன் உள்ளது . அரசு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். சொத்து மற்றும் பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

சுக்கிரன் புதன் சேர்க்கை நல்ல செல்வத்தை கொடுக்கும். செவ்வாய் 8ல் இருப்பதால் சில அலைச்சல்கள் இருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமானதாகவே இருக்கும். தொழில் செய்பவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். உங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தொழில், வேலை போன்ற எதிலும் இடையூறு இல்லை. குரு 8ல் இருப்பது துலாம் ராசியினருக்கு சாதகமாகவே இருக்கும்.

திருமணம்

திருமண விஷயத்தில் குரு பலன் பெரிதாக இல்லை என்றாலும் ஆகஸ்ட் மாதம் செவ்வாய் 8ம் வீட்டில் இருப்பதால் கண்ணுக்கு தெரியும் திருமண வரன்கள் கண்ணுக்கு தெரியும். ஆனால் காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவி உறவு

திருமணமான கணவன் மனைவி இடையே உறவில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் 8ம் இடத்தில் இருப்பதால் உறவுகளுக்கான முக்கியத்துவம் அல்லது பொருளாதார ரீதியாக இருந்தால் தேவையற்ற இடையூறு ஏற்படலாம். இதனால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.

மாணவர்களே சூப்பர்

மாணவர்களை பொறுத்தவரை இந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் அப்படியே நிறைவேறும்

பெண்களே எச்சரிக்கை

இந்த ஆகஸ்ட் மாதம் பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணிச்சுமை, குடும்ப அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். தேவைஇல்லாமல் சத்தமிட வேண்டிய சூழல் இருக்கும். கொஞ்சம் சமாளித்து செல்ல வேண்டிய சூழல்தான். உங்களுக்கு சில எதிர்மறையான விஷயங்களை உடன் இருப்பவர்கள் செய்தாலும் அதை சுமூகமாக கையாள கற்று கொள்ளுங்கள்.

ஆகஸ்ட் ஆரோக்கியம் எப்படி இருக்கும்

உடல் நலனில் சூடு காரம், வயிறு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.

இந்த விஷயத்தை செய்யாதீங்க

வருமானத்திற்கு நல்ல மாதமாக இருந்தாலும் சொத்து வாங்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும். அதற்கு ஆகஸட் மாதம் உகந்தது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner