August Month Rasi Palan: கடைசி வாரத்தில் சுக்ரன் - புதன் இணைவு.. பிரச்சினைகளை சந்திக்கும் ராசி எது? - ஆகஸ்ட் மாத பலன்!
August Month Rasi Palan: ஒன்றாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால், அவ்வப்போது நீங்கள் கொந்தளிக்கவும், பின்பு மீண்டும் அமைதியாகவும், மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிடும் அதைப் பற்றி நாம் பெரிதாக கவலைப்பட தேவையில்லை. - ஆகஸ்ட் மாத பலன்!

கன்னி ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்களை லைஃப் ஹாரஸ்கோஃப் யூடியூப் சேனலில் பிரபல ஜோதிடர் ஷங்கர் நாராயணன் பேசி இருக்கிறார். அவர் கணித்திருக்கும் பலன்கள் உங்களுக்கு சாதமாக இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 15, 2025 11:24 AMLove Horoscope : இன்று எந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்? யார் கவனமாக இருக்க வேண்டும் தெரியுமா?
Feb 15, 2025 11:21 AMMoney Luck: அதிர்ஷ்ட கதவை திறக்கும் குரு.. மங்கள யோகத்தை பெற்ற ராசிகள்.. 2025 ஆம் ஆண்டு யோகம் தான்!
Feb 15, 2025 07:00 AMSani: கோடி கோடியாய் கொட்ட வருகிறாரா சனி.. 2025ல் பண மழை.. 3 ராசிகள் குடும்பத்தில் மகிழ்ச்சி!
Feb 15, 2025 05:00 AMToday Rasipalan : 'நல்ல செய்தி தேடி வரும்.. தயக்கம் வேண்டாம்.. தைரியமா இருங்க' இன்றைய ராசிபலன் இதோ!
Feb 14, 2025 01:45 PMKumbha Rasi: கோடிகள் கொட்டும் சூரிய பெயர்ச்சி.. 2025-ல் கும்பத்தில் நுழைவு.. பணமழை யாருக்கு கிடைக்கும்?
Feb 14, 2025 01:03 PMSun Transit : சனியின் வீட்டில் சூரியன்.. 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வரப்போகிறது!
அதில் அவர் பேசும் போது, “கன்னி ராசிக்கு தற்போதைய பெயர்ச்சிகள் அனைத்துமே சாதகமாக இருக்கிறது என்பதை, கடந்த மாதமே பார்த்தோம். இப்போது கன்னி ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறார். சனிபகவான் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அதனால், ஓரளவுக்கு உங்களது தொழில் வாழ்க்கை நன்றாகவே சென்று கொண்டிருக்கும். கூடவே செவ்வாய் இருப்பதால், உங்களுக்கு திறமையானது வெளியே நன்றாக தெரியும். அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்.
10 ம் இடத்தில் புதன் சுக்கிரன்
புதனும், சுக்கிரனும் பத்தாம் இடத்தில் இருப்பதால் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புவர்களுக்கு, இந்த காலமானது மிகச் சரியான காலமாக இருக்கும். ஆகையால், அதற்கான முயற்சிகளை நீங்கள் தொடரலாம். வாய்ப்புகள் உங்கள் வசப்படும்.
ஒன்றாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால், அவ்வப்போது நீங்கள் கொந்தளிக்கவும், பின்பு மீண்டும் அமைதியாகவும், மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிடும் அதைப் பற்றி நாம் பெரிதாக கவலைப்பட தேவையில்லை.
திருமணம் நடக்குமா?
கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பாக, சின்ன சின்ன தடைகள் வந்தாலும், குருவின் பார்வை இருப்பதால் அது உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று விடும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன குழப்பங்கள், சண்டைகள் உள்ளிட்டவையும் நிவர்த்தி ஆகிவிடும். பொருளாதார ரீதியாகவும் இந்த மாதம் மிகவும் நன்றாகவே இருக்கிறது.
மாணவர்களுக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமைந்திருக்கிறது. நீங்கள் போடுகிற திட்டத்தின் படி முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டும் போதும். இன்ன பிறவை எல்லாம் உங்களது கைகளில் வந்து சேர்ந்துவிடும். இல்லத்தரசிகளை பொறுத்த வரை,குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி, காலம் உங்களது வசமாக வாய்ப்பு இருக்கிறது. தேவையான செலவுகளை செய்து குடும்பத்தில் நற்பெயரை நீங்கள் சம்பாதிப்பீர்கள்.
உடல் நலத்தைப் பொறுத்தவரை கடைசி வாரம் சுக்கிரன் கேதுடன் இணைகிறார். அதனால் காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட சின்ன சின்ன,பிரச்சினைகள் வந்து செல்லும். வயது மூத்தவர்கள் உங்களது ஆசைகளை இந்த மாதத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகையால் மிகவும் கூலாக இந்த ஆகஸ்ட் மாதத்தை நீங்கள் கடக்கலாம்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்