August Month Rasi Palan: கூட்டணி போடும் குரு - செவ்வாய்.. உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த ராசிக்கு ஜாக்பாட் உறுதி!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Month Rasi Palan: கூட்டணி போடும் குரு - செவ்வாய்.. உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த ராசிக்கு ஜாக்பாட் உறுதி!

August Month Rasi Palan: கூட்டணி போடும் குரு - செவ்வாய்.. உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த ராசிக்கு ஜாக்பாட் உறுதி!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 21, 2024 03:37 PM IST

August Month Rasi Palan: “ ஆகஸ்ட் மாதத்தில், குரு, செவ்வாய் கூட்டணி சேர்கிறது. இந்த கூட்டணியானது, இரண்டாம் வீட்டில் நடக்கிறது. இதன் காரணமாக, உங்களுக்கு குரு மங்கள யோகமானது உண்டாகும். ஐந்தாம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது.

August Month Rasi Palan: கூட்டணி போடும் குரு - செவ்வாய்.. உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த ராசிக்கு ஜாக்பாட் உறுதி!
August Month Rasi Palan: கூட்டணி போடும் குரு - செவ்வாய்.. உருவாகும் குரு மங்கள யோகம்.. இந்த ராசிக்கு ஜாக்பாட் உறுதி!

இது போன்ற போட்டோக்கள்

ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்? 

அதில் அவர் பேசும் போது, “ மேஷ ராசியை பொருத்தவரை, வருகிற ஆகஸ்ட் மாதத்தில், குரு, செவ்வாய் கூட்டணி சேர்கிறது. இந்த கூட்டணியானது, இரண்டாம் வீட்டில் நடக்கிறது. இதன் காரணமாக, உங்களுக்கு குரு மங்கள யோகமானது உண்டாகும். ஐந்தாம் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரன் சேர்ந்து இருக்கிறது. 

சூரியன், 16ஆம் தேதி நான்காம் வீட்டிலிருந்து, ஐந்தாம் வீட்டிற்கு இடம்பெயர்கிறார். கூடவே, இந்த மாத தொடக்கத்திலேயே, புதன் பகவான் வக்கிரம் அடைந்து விடுவார். ஆனால், அது உங்களுக்கு பெரிதான பாதிப்பை கொடுக்காது. சுக்கிரன் 25 ஆம் தேதி கேதுடன் ஆறாம் இடத்தில் இணைந்து விடுவார். 26 ஆம் தேதி, செவ்வாய் பகவான் குருவை விட்டு பிரிந்து செல்வார். சனிபகவான் 11ஆம் இடத்தில் அப்படியே வக்கிரம் அடைந்து இருக்கிறார்.

தொழிலைப் பொறுத்தவரை, நீங்கள் நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு தொழிலை கையில் எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது ஏதாவது வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாலோ, அது குறித்தான முடிவை, நீங்கள் உடனடியாக எடுத்து விடுங்கள். கால தாமதம் செய்ய வேண்டாம். அடுத்த எட்டு மாத காலம் உங்களுக்கு மிகவும் நல்ல நேரமாக இருக்கிறது. ஆகையால், முடிவுகளை தள்ளிப் போட வேண்டாம். சனி பகவான் உங்களை வேகப்படுத்துவார். ஆகையால், இதுவரை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.

இணைந்து எடுக்கும் முடிவுகளின் பலன்

குடும்பத்தைப் பொறுத்தவரை, திருமண முயற்சிகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இதுதான் மிகச் சரியான காலம். காரணம் என்னவென்றால், குரு மங்கள யோகமானது உண்டாகிறது. இந்த மங்களத்தின் வழியாக, வீட்டில் மங்களம் காரியங்கள் நடக்கும். ஆகையால் அது குறித்தான முயற்சிகளை நீங்கள் தைரியமாக எடுக்கலாம். செவ்வாய் தான் மேஷத்திற்கு அதிபதி. செவ்வாய் என்பது ரத்தத்தை குறிக்கும். கணவன், மனைவி என்பது அந்த மாதிரியான ஒரு உறவு தான். உங்களுக்கு செவ்வாய் தற்போது மிக நன்றாக இருப்பதால், கணவன் மனைவி இணைந்து எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.

புதன் சுக்கிரன் இணைவு இருப்பதால், மாணவர்களை பொருத்தவரை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கில் ஆர்வம் உள்ளவர்கள் அதில் நீங்கள் தைரியமாக முயற்சிகளை எடுக்கலாம் அவை அனைத்தும், வெற்றியை உங்களுக்கு பெற்று தருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், இந்த காலமானது அருமையான காலமாக வாய்த்து இருக்கிறது. குருவின் அருள் இருப்பதால் நீங்கள் செய்யப் போவதை முன்னமே சொல்லி அடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை, இந்த மாதம் கிரக அமைப்பானது நீங்கள் நினைத்ததை செய்யக்கூடிய விதமாக அமைந்திருக்கிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை, உங்களுக்கு பெரிதாக எந்த விதமான பெரிய இடர்பாடுகளும் இல்லை. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை பெரிதான பிரச்சினைகள் எதுவும் இல்லை. 

25 ஆம் தேதி சுக்கிரன், கேதுடன் நீச்சமடைவார். ஆகையால், அந்த வாரத்தில், அடிவயது பகுதியில் தொற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒரு சிலருக்கு மட்டும் தான். அப்படியே வந்தாலும், குரு பார்வை இருப்பதால் அது நிவர்த்தியை நோக்கி அழைத்துச் சென்று விடும். ஆகையால் பயப்படத் தேவையில்லை.

வயது மூத்தோர்கள் சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறீர்கள் அல்லது ஏதாவது இடத்தை வாங்க நினைக்கிறீர்கள் என்றால், இந்த காலமானது உங்களுக்கு சரியான காலமாக இருக்கிறது ஆகையால் நீங்கள் சந்தோஷமாக அதனை செய்யலாம்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: