August Kumbam RasiPalan : படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி.. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Kumbam Rasipalan : படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி.. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?

August Kumbam RasiPalan : படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி.. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?

Divya Sekar HT Tamil Published Jul 19, 2024 11:25 AM IST
Divya Sekar HT Tamil
Published Jul 19, 2024 11:25 AM IST

August Kumbam Rasi Palan : ஆகஸ்டு மாதம் இந்த அளவுக்கு உங்களுக்கு கஷ்டங்கள் வர வாய்ப்பில்லை. சுமூகமான மாதமாக கும்ப ராசி பெண்களுக்கு இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆறுதலாக இருக்கும் கும்ப ராசி பெண்களுக்கு.

படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி.. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?
படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்த கும்ப ராசி.. ஆகஸ்டு மாதம் உங்களுக்கு எப்படி இருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

தொழில்

ஆகஸ்ட் மாதம் கும்ப ராசிக்கு தொழில் துறையை பொறுத்தவரை அமைதியாகவும் பிரச்சனை இல்லாமலும் சுமூகமாக தொழில் வாழ்க்கை அமையப்போகிறது. கும்ப ராசி தொழில் வாழ்க்கையை பொருத்தவரை மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதிக்காக வேலையை குறைத்து செய்யப் போகிறேன் என்ற எண்ணமும், இதுவரை எதிரிகளாக தோன்றிய சிலர் தற்போது நண்பர்களாக சுமூகமாக பேசி கூடுவதும் என சில மாற்றங்கள் இந்த மாதம் ஏற்படப்போகிறது. 

அதேபோல தொழில் முனைவோராக இருந்தால் அவர்களுக்கு கொடுத்தல் வாங்கல் முதலீடுகள் என அனைத்தும் சுமூகமாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் பொருத்தவரை கும்பத்திற்கு தொழில் ஆரோக்கியம் பணம் ஆகியவை நல்ல பலன்களை கொடுப்பதாக இருக்கிறது. சுமுகமான ஒரு மாதமாக தான் கும்ப ராசிக்கு ஆகஸ்ட் மாதம் இருக்கிறது.

குடும்பம்

கும்ப ராசியை பொறுத்தவரை குடும்பத்தில் திருமணம் சம்மந்தமான சில விஷயங்கள் முன்னெடுத்தாலும் ஜென்ம சனி காரணமாக அது தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கும்ப ராசியில் காதல் உறவில் இருப்பவர்கள் இந்த மாதம் உங்கள் எதிர்காலத்தை குறித்து முடிவெடுப்பதற்கு சிறந்த மாதமாக உள்ளது. அதாவது திருமணத்திற்குப் பிறகு எப்படி வாழ்வது, எப்படி சம்பாதிப்பது, திருமணத்தை எப்படி நடத்துவது, வெளிநாடு செல்லலாமா? என பல்வேறு கோணங்களில் எதிர்காலத்தை குறித்து யோசிக்க இது சிறந்த மாதமாக இருக்கிறது.

சுக்கிரன் பார்வை சனி மீது விழும் போது ஒரு சுமுகமான மகிழ்ச்சியான, சாந்தமான ஒரு சூழ்நிலை உருவாகும். எனவே சுக்கிரன் பார்வை சனி மீது இருப்பதால் கும்ப ராசிக்கு சுமுகமான வாதமாக ஆகஸ்ட் மாதம் இருக்கிறது.

கஷ்டங்களுக்கு இடமில்லாமல் போகும்

அதேபோல வக்ர சனியால் படாத பாடு பட்டு கஷ்டங்களை அனுபவித்தீர்கள் என்றால் இனி அந்த கஷ்டங்களுக்கு இடமில்லாமல் போகும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது இந்த ஆகஸ்ட் மாதத்தில்.

அதேபோல கும்ப ராசிக்காரர்கள் பல விஷயங்களுக்கு பிளான் செய்து ஆனால் அது நிறைவேறாமல் போயிருக்கும். ஆனால் இந்த மாதம் நீங்கள் ஒரு செயலை செய்வதற்கோ அல்லது ஒரு படிப்பை எடுத்து படிப்பதற்கோ அல்லது ஒரு பணிக்கு விண்ணப்பம் போடவோ அல்லது நீங்கள் பாதியில் விட்ட சில வேலைகளை செய்யவோ இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும்.

கும்ப ராசி பெண்களுக்கு 

கும்ப ராசி பெண்கள் மன அழுத்தத்தில் ரொம்ப காலமாக இருந்திருப்பீர்கள். அதாவது ஒரு குடும்பத்தில் தனக்கு நன்றாக அமைந்தால் கணவருக்கு நன்றாக அமையவில்லை. அதேபோல பெற்றோருக்கு நன்றாக இருந்தால் பிள்ளைகளுக்கு நன்றாக இருப்பதில்லை இப்படி மாறி மாறி ஏதாவது ஒரு விஷயத்தில் மன அழுத்தம் ஏற்பட்டு கும்ப ராசி பெண்கள் கஷ்டங்களை அனுபவித்து இருப்பார்கள்.

 ஆனால் இந்த மாதம் இந்த அளவுக்கு உங்களுக்கு கஷ்டங்கள் வர வாய்ப்பில்லை. ஆகஸ்ட் மாதம் சுமூகமான மாதமாக கும்ப ராசி பெண்களுக்கு இருக்கும். ஆகஸ்ட் மாதம் ஆறுதலாக இருக்கும் கும்ப ராசி பெண்களுக்கு.

கும்ப ராசிக்கு ஆரோக்கியம் எப்படி?

கும்ப ராசியில் உள்ளவர்கள் ஏற்கனவே ஏதாவது நோய்வாய்ப்பட்டு இருந்தால் அல்லது விபத்து நேர்ந்து காயங்களோடு இருந்தால் அல்லது சில பிரச்சனைகள் இருந்தால் இந்த மாதம் அது நிவர்த்தியாக வாய்ப்புண்டு. கும்ப ராசிக்கு ஆரோக்கியத்தை பொறுத்தவரை குணமாகும் மாதமாக ஆகஸ்ட் மாதம் இருக்கிறது. உங்கள் உடல் நிலையை சரி செய்யும் மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கிறது.

அதேபோல 60, 70 வயதான கும்ப ராசிக்காரர்கள் குடும்பத்தில் மன நிம்மதி இல்லாமல் தனது பிள்ளைகளிடம் பணம் வாங்கி செலவழிப்பது பிடிக்காமல் மன கஷ்டத்தில் இருந்தால் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மூளையை பயன்படுத்தி முதலீடு செய்து அதில் முன் வர வேண்டும். ஏனென்றால் இன்னும் ஜென்ம சனி, சனியின் பார்வை எல்லாம் கும்ப ராசியின் மேல் இருக்கிறது. அதனால் கவனமாக இருந்து காய் நகற்ற வேண்டும் மூளையே மூலதனம்.

ஆகஸ்ட் மாதம் கும்ப ராசியை பொறுத்தவரை மனமாற்றம், மன நிம்மதி கொடுக்கக் கூடிய ஒரு மாதமாக இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner