August Kadagam Rasipalan : என்ஜாய்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் கடக ராசியினரே.. ஆகஸ்ட்டில் அந்த விஷயத்தில் கவனம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  August Kadagam Rasipalan : என்ஜாய்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் கடக ராசியினரே.. ஆகஸ்ட்டில் அந்த விஷயத்தில் கவனம்!

August Kadagam Rasipalan : என்ஜாய்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் கடக ராசியினரே.. ஆகஸ்ட்டில் அந்த விஷயத்தில் கவனம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jul 19, 2024 08:29 PM IST

August Kadagam Rasipalan: மாணவர்களை பொறுத்த மட்டில் ஆகஸ்ட் மாதம் மிக நல்ல மாதம். மிகவும் யோகமான மாதம். இந்த மாதம் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் கடின முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். முயற்சி வெற்றி தரும் . பண உதவி, பொருளுதவி, வழிகாட்டுதல், அறிவுரை கிடைக்கும்.

என்ஜாய்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் கடக ராசியினரே.. ஆகஸ்ட்டில் அந்த விஷயத்தில் கவனம்!
என்ஜாய்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் கடக ராசியினரே.. ஆகஸ்ட்டில் அந்த விஷயத்தில் கவனம்!

இது போன்ற போட்டோக்கள்

ஒவ்வொரு மாதமும் ஏதாவது நம் வாழ்வில் மாற்றம் வராதா என்று காத்திருக்கும் ராசிகளில் கடக ராசியும் ஒன்று. 2024 ஆகஸ்ட் மாதம் கடக ராசியினருக்கு எப்படி இருக்கும் என்று அச்சமா..

கடக ராசிக்கு ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்?

கடக ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் குருவும் செவ்வாய்யும் 11ம் வீட்டில் உள்ளனர். 25ம் தேதி வரை குருவும், செவ்வாயும் ஒரே இடத்தில் உள்ளனர். இதனால்  குரு பலனோடு செவ்வாயின் பலனும் சேர்ந்து கிடைக்கும்.

சனி 8ல் உள்ளது. ஆனால் வக்கிரம் அடைந்துள்ளது. வக்கிரம் அடைந்த சனி உங்களுக்கு விபரீத ராஜ யோகத்தோடு வரனையும் தருவார். குறிப்பாக சனி வக்கிரம் அடைந்தது கடகராசியினருக்கு மிகவும் நல்லது. 8ல் ஆட்சி பெற்று சனி வக்கிரம் அடையும் போது நன்மைகள் வந்து சேரும். ஆகஸ்ட் மாதத்தை பொருத்த வரை குரு செவ்வாய்தான் கடகத்திற்கான பிளஸ். 2ம் இடத்தில் புதன் சுக்கிரன் இருப்பதும் பிளஸ்தான். சூரியன் முதல் வீட்டில் உள்ளார். அதனால் கடக ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் எல்லாமே வெற்றி தான்.

தொழில் லாப ஸ்தானம் எப்படி

கடக ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் பணி வாழ்க்கையில் புரமோஷன் வர வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த வளர்ச்சி வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தனாதிபதி சூரியன் முதல் வீட்டில் இருப்பதால் பணத்தை தருவார். குருவும், செவ்வாய்யும் 11ல் இருப்பதால் யாரையும் நீங்கள் பார்வையில் சரி செய்வீர்கள். புதன் 2ல் இருப்பதால் நீங்கள் பேசினாலே போதும் உங்கள் அறிவு வெளிப்படும். சுக்கிரன் 2ல் இருப்பதால் நீங்க பேசினாலே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதனால் ஆகஸ்ட்டு மாதத்தில் கடக ராசியினருக்கு அதிர்ஷ்டத்திற்கு பஞ்சமில்லை.

குடும்ப அமைதி நிலவுமா

8ல் சனி இருப்பதால் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும். மற்ற படி திருமண முயற்சியில் இருப்பவர்கள் திருமணம் செய்யலாம். வரன் தேட, வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஆகஸ்ட் மாதம் மிக சரியான நேரம்.

குடும்ப வாழ்க்கையை பொருத்த மட்டில் சனியால் சில சங்கடங்கள் இருக்கலாம். ஆனால் குரு அதை சரி செய்ய வாய்ப்பு உள்ளது. பல இடங்களில் இருந்து சமாதான படுத்தவும் அறிவுரை கூறவும் ஆட்கள் வருவார்கள்.

மாணவர்களே என்ஜாய்

மாணவர்களை பொறுத்த மட்டில் ஆகஸ்ட் மாதம் மிக நல்ல மாதம். மிகவும் யோகமான மாதம். இந்த மாதம் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் கடின முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். முயற்சி வெற்றி தரும் . பண உதவி, பொருளுதவி, வழிகாட்டுதல், அறிவுரை கிடைக்கும்.

ஆரோக்கியம்

கடக ராசியினருக்கு 8ம் இடத்தில் சனி உள்ளதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது, படி ஏறும்போது, விளையாடும் போது, குளிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கவனமாக இருந்தால் பயம் இல்லை. சுக்கிரன் கடைசி வாரத்தில் கேதுவுடன் சேர்வதால் காது, மூக்கு தொண்டையில் சிறிய பிரச்சனைகள் வரலாம்

இளைப்பாறுங்கள் இல்லத்தரசிகளே

கடக ராசி பெண்களுக்கு கடந்த நாட்கள் மிகவும் கடினமான தருணம். அழுகையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெரிய பலம்தான். ஆனால் ஆகஸ்ட் மாதம் பெண்களுக்கு நிறைய விஷயத்திற்கு சாதகமாக உள்ளது. பிரச்சனைகளை ஒதுக்குங்கள். தேடி வரும் நல்ல விஷயங்களை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

கடராசியைச் சேர்ந்த மூத்த குடி மக்களுக்கு தானாக நடக்கும் விஷயங்களை தேர்ந்தெடுங்கள். தேடி வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்களாக எதையும் தேடி அலையாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9