’முன்னேற்றம் தரும் முத்து! யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ ஜோதிட ரகசியம் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’முன்னேற்றம் தரும் முத்து! யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ ஜோதிட ரகசியம் இதோ!

’முன்னேற்றம் தரும் முத்து! யார் அணியலாம்? யார் அணியக்கூடாது?’ ஜோதிட ரகசியம் இதோ!

Kathiravan V HT Tamil
Dec 09, 2024 05:30 PM IST

சந்திர பகவானுக்கு உரிய முத்தை திங்கட்கிழமை அன்று அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.

Pearl
Pearl

முத்து எப்போது அணிய வேண்டும்?

சந்திர பகவானுக்கு உரிய முத்தை திங்கட்கிழமை அன்று அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், அதை அணிவதற்கு முன் சுத்திகரிப்பு செய்ய வேண்டியது அவசியம்.

முத்து அணிவது எப்படி?

வெள்ளி உடன் முத்துவை சேர்ந்த்து அணிவது நன்மைகளை கொண்டு வரும். திங்கட்கிழமையன்று முதலில் நீர் அல்லது பாலில் முத்தை ஊறவைத்து சுத்திகரிக்க வேண்டும். பின்னர் சிவபெருமானின் பாதத்தில் வைத்து அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்து சுண்டு விரலில் அணியும் போது நன்மைகள் சேரும். 

முத்துக்களை யார் அணிய வேண்டும்?

ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், கடகம், மீனம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் முத்து அணியலாம். ஜாதகத்தில் சந்திரனின் நிலை பலவீனமாக இருக்கும் போது முத்து அணியலாம். அதே சமயம், முத்து அணிவதற்கு முன், உங்கள் கிரகங்களின் நிலையை நீங்கள் சரிபார்க்க வேண்டும், மேலும் ஜோதிடரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner