வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? இந்த 5 கிரக நிலை இருந்தால் கடைசி வரை.. ஜோதிடர் சொல்லும் காரணங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? இந்த 5 கிரக நிலை இருந்தால் கடைசி வரை.. ஜோதிடர் சொல்லும் காரணங்கள்!

வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? இந்த 5 கிரக நிலை இருந்தால் கடைசி வரை.. ஜோதிடர் சொல்லும் காரணங்கள்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Updated Apr 23, 2025 10:31 AM IST

நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, எட்டாக்கனியாக இருக்கிறது ஓகே.. சிலர் கையில் பலகோடிகளை வைத்திருந்தாலும் சொந்த வீடு அமையவில்லையே அதற்கு என்ன காரணம்" என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதற்கான விளக்கத்தை ஜோதிடர் தருகிறார்.

வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? இந்த 5 கிரக நிலை இருந்தால் கடைசி வரை.. ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!
வாழ்நாள் முழுவதும் வாடகை வீடுதானா..? இந்த 5 கிரக நிலை இருந்தால் கடைசி வரை.. ஜோதிடம் சொல்லும் காரணங்கள்! (Meta Ai)

இது போன்ற போட்டோக்கள்

"சரி.. நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, எட்டாக்கனியாக இருக்கிறது ஓகே.. சிலர் கையில் பலகோடிகளை வைத்திருந்தாலும் சொந்த வீடு அமையவில்லையே அதற்கு என்ன காரணம்" என்று நீங்கள் கேட்பது புரிகிறது அதற்கான விளக்கத்தை தருகிறேன்.

வாடகை வீட்டிற்கான கிரக நிலைகள் :

1. வீடு, வாகனத்தை குறித்தும் 4-ம் இடத்தில் ராகுவோ, கேதுவோ இருந்து பாவ கிரகங்களின் தொடர்பு கிடைத்தால் அந்த ஜாதகர் தலைகீழாக நின்றாலும் சொந்தமாக வீடு வாங்கவே முடியாது. ஏதோ ஒரு நிலையில் வீடு வாங்கினாலும் அதில் வில்லங்கம், பிரச்னைகள் காம்போ ஆஃபராக வந்து சேர்ந்து ஜாதகரை படாத பாடு படுத்தும்.

2. 4-ம் அதிபதி ராகு சாரம் பெறுவது, 4-ம் இடத்து அதிபதி 6, 8-ம் இடத்துடன் தொடர்பு கொள்வது அல்லது 6, 8 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தாலும் சொந்த வீடு அமையாது.

3. 4-ம் அதிபதி 6-ல் இருந்தால் உறவினர் வீட்டில் வசிக்க வேண்டி நிலை ஏற்படும்.

4. 4-ம் அதிபதி 6, 8, 12-ம் அதிபதிகளில் ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தாலும் சொந்த வீடு இருந்தாலும், அந்த ஜாதகரால் சொந்த வீட்டில் வசிக்க முடியாத நிலை ஏற்படும்.

5. 4-ம் பாவம், 4-ம் அதிபதி, சுக்கிரன் இவர்களுக்கு 6, 8, 12-ம் அதிபதிகளில் ஒருவரும் அல்லது ராகு, கேது தொடர்பு கொண்டாலும் கட்டிய வீட்டில் வசிக்கும் யோகம் இருக்காது. வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

கட்டுரையாளர்: ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர், astrovenkataeswar@gmail.com, 91590 13118