மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!
நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் திக்பலம் பெறுகின்றன. அதே போல் செவ்வாய் மற்றும் சூரியன் நிஷ்பலம் பெறுகின்றனர். இதில் செவ்வாய் 4ஆம் இடத்தில் இருந்தால் தோஷமாகவும் மாறும். சனி பகவானுக்கு 4ஆம் இடம் என்பது கல்வித்தடைகளை உண்டாக்கும்.
ஒரு ஜாதகத்தில் கேந்திரங்கள் இனி அமையாத தூண்கள் போல் விளங்குகின்றது. குறிப்பாக 4ஆம் இடம் என்பது சுகம், தாய், பட்டம், பதவி, உயர்க்கல்வி, வாகனம், வீடு, முதலீடுகள் ஆகியவற்றை குறிக்கினது. கேந்திரங்களை பொறுத்தவரை உழைப்பின் மேன்மையை குறிப்பிடும் இடம் ஆகும். 4ஆம் இடத்தில் சுபர் அல்லது பாவி ஆகிய இரண்டு கிரகங்களும் இருக்கலாம். இதனால் பாவக்கோள்கள் கேந்திரத்தில் இருப்பது பாதிப்புகளை தராது.
4ஆம் இடமும் கிரகங்களும்!
நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் திக்பலம் பெறுகின்றன. அதே போல் செவ்வாய் மற்றும் சூரியன் நிஷ்பலம் பெறுகின்றனர். இதில் செவ்வாய் 4ஆம் இடத்தில் இருந்தால் தோஷமாகவும் மாறும். சனி பகவானுக்கு 4ஆம் இடம் என்பது கல்வித்தடைகளை உண்டாக்கும்.
ஒருவருக்கு கிடைக்கும் வீடு, வாகனம், சுகம், முதலீடுகள் ஆகியவற்றை 4ஆம் இடத்தின் அடிப்படையில் கணிக்கலாம். சுக்கிரன் 4ஆம் இடத்தில் இருந்தால் சுகபோகமான வாழ்கை ஜாதகருக்கு அமையும். இவர்களுக்கு வசதியான வீடு, அந்தஸ்து மிக்க வாழ்கை கிடைக்கும்.
சந்திரன் ஏற்படுத்தும் பாதிப்புகள்
சந்திரன் 4ஆம் இடத்தில் இருக்கும் போது தாயாரின் உடல்நிலையில் சில பாதிப்புகளை உண்டாக்கும். அதே வேளையில் சந்திரன் தேய்பிறையாக இருக்கும் போது இந்த விதி வேலை செய்யாது. அதிகம் பிரயாணங்களை குறிக்கும் இடமாகவும் 4ஆம் இடம் விளங்குகின்றது. ராகு, கேது ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் அமர்ந்து இருந்தால் ஜாதகருக்கு கல்வியில் மாறுபாடான படிப்பு படிக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த ஊரை விட்டு செல்லும் நிலை ஏற்படும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.