Kesari Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்! சிங்கம் போல் வாழலாம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kesari Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்! சிங்கம் போல் வாழலாம்!

Kesari Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்! சிங்கம் போல் வாழலாம்!

Kathiravan V HT Tamil
Jan 17, 2025 01:54 PM IST

குரு மட்டுமே சந்திரனை பார்த்தாலே கேசரி யோகம் உண்டாகும் என்பது ஜோதிட விதியாக உள்ளது. கேசரி என்ற சொல்லுக்கு சிங்கம் என்று பொருள்படும்

Kesari Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்!
Kesari Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்!

கேசரி யோக விதிகள் 

இதில் சந்திர பகவான் தேய்பிறை அல்லது வளர்பிறை ஆகிய நிலைகளில் இருக்கலாம். ஆனால் குரு பகவான் ஆனவர் நீசமோ, கிரகனமோ அல்லது அஸ்தமனமோ ஆகி இருக்க கூடாது.  குரு பகவான் சூரியனுக்கு அருகில் இருந்தால் அஸ்தமனம் ஆகிவிடுவார். ராகு அல்லது கேது கிரகங்க உடன் அருகில் இருந்தால் கிரகணம் ஆகிவிடுவார், மேலும் குரு பகவான் நீசம் அடைந்துவிட்டாலும் பார்வை வலு இருக்காது. மேலும் உங்கள் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு பகவான் மறையாமலும் இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. மேற்கண்ட விதிகளுக்கு உட்படு 5 அல்லது 9ஆம் பார்வையில் சந்திரனை பார்த்தால் கேசரி யோகம் உண்டாகும். இந்த யோகம் முழுமையாக செயல்பட குறைந்த பட்சம் லக்னாதிபதி சமம் என்ற நிலையில் இருக்க வேண்டும். 

துலாம் லக்னமும் கேசரி யோகமும்!

எடுத்துக் காட்டாக ஒரு துலாம் லக்ன ஜாதகத்தை எடுத்துக் கொள்வோம். இவர்களுக்கு 10ஆம் வீடான கடகம் ராசியில் சந்திரன் உள்ளார். மீனம் ராசியில் ஆட்சி பெற்ற குரு சந்திரனை பார்க்கிறார் என்றாலும் 6ஆம் வீட்டில் குரு மறைந்து உள்ளதால் இந்த யோகம் வேலை செய்யாது. ஆனால் இதே குரு பகவான் விருச்சிகம் ராசியில் அமர்ந்தபடி கடகம் ராசியில் உள்ள சந்திரனை பார்த்தால் கேசரி யோகம் உண்டாகும். 

கேசரி யோக பலன்கள்!

எதிரிகளை வெற்றி கொள்ள வைத்தல், திடகாத்திரமான உடல் நிலை, துணிகர செயல்களை செய்தல், கடன், நோய், எதிரி, வழக்குகளை வெற்றி பெற்றி பெறுதல் உள்ளிட்ட பலன்களை கேசரி யோகம் உண்டாக்கும். இந்த யோகம் 12 லக்னங்களுக்கும் பலன் தரும். அரசியல் தலைவர்கள், விளையாட்டு மற்றும் கலைத்துறை சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், ஆட்டிட்டர்கள், வழக்கறிஞர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்