Pets: 'வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது வரமா? சாபமா?' ஜோதிடம் சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pets: 'வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது வரமா? சாபமா?' ஜோதிடம் சொல்வது என்ன?

Pets: 'வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பது வரமா? சாபமா?' ஜோதிடம் சொல்வது என்ன?

Kathiravan V HT Tamil
Published Feb 20, 2024 07:20 PM IST

“27 நட்சத்திரங்களும், ஒரு ஜீவராசிகளுடன் தொடர்பை கொண்டுள்ளது”

செல்லப்பிராணிகள்
செல்லப்பிராணிகள்

இது போன்ற போட்டோக்கள்

27 நட்சத்திரங்களும், ஒரு ஜீவராசிகளுடன் தொடர்பை கொண்டுள்ளது. பூனைகளை பொறுத்தவரை அதை யாரும் கட்டி வைப்பது கிடையாது. உணவு நேரத்தில் சாப்பிட வரும் பூனை பின் சுதந்திரமாக உலவும் தன்மை கொண்டது. பூனை வளர்ப்பதால் தோஷமோ, பாவமோ, சாபமோ, ஏதும் கிடையாது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

நாய்களை பொறுத்தவரை அதனை சுதந்திரமாக உலவவிடாமல், கட்டிப்போட்டு வைப்பது பாவம் தரும் செயல் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இதனால் ஜாதகத்தில் 12ஆம் இடம் காரணமாக வீட்டில் மனநலம் பாதித்தவர்களை உருவாக்குதல், தொழிலில் நஷ்டத்தை உருவாக்குதல், மருத்துவர் விரையங்கள் ஏற்படுதல், குடும்ப பிரச்னைகளை ஏற்படுத்தும். 

எந்த ஒரு ஜீவராசிகளுக்கும் இருப்பிடம் தந்து, உணவு தந்து வளர்த்து வருவது ஜாதகத்தில் 6ஆம் பாவத்தில் நேர்மறையான நன்மைகளை தரும், ஆனால் அதனை அசையவிடாமல், கட்டிவைத்து வளர்த்தால் உறுதியாக பாவங்கள் வரும், இதனால் 6ஆம் இடம் மூலம் எதிர்மறை நிகழ்வுகள் வரலாம். நாய் வளர்க்க ஆசை படுபவர்கள் அது சுந்தந்திரமாக வளர்வதற்கான இடத்தை தருவது அவசியம். செல்லப்பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் தெரு நாய்களுக்கு உணவு அளித்து பராமரிப்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

Whats_app_banner

டாபிக்ஸ்