Horoscope Luck: பத்துக்கு பத்து; பொருத்தம் பார்த்து கட்டி வைத்தும் பிடாரி மனைவி?; நொந்து திணறும் கணவன் -காரணம் என்ன?
திருமண பொருத்தத்தை பொறுத்தவரையில், 10 க்கு 7 பொருத்தம் 10 க்கு 5 பொருத்தம், பத்துக்கு 10 பொருத்தம் என்று பார்ப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் அவையெல்லாம் வெறும் 5 சதவீதம்தான். காரணம் அதை தசவித பொருத்தம் என்று நாம் சொல்வோம்.

திருமண பொருத்தத்தில் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.
இது குறித்து பிரபல ஜோதிடர் அவிநாசி லிங்கம் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசும் போது, “பல இடங்களில் பல பொருத்தங்களை பார்த்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று தீர்மானித்த பின்னர் திருமணம் நடத்தி வைத்த போதும், சில தம்பதிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.
பத்துக்கு 10 பொருத்தம்
திருமண பொருத்தத்தை பொறுத்தவரையில், 10 க்கு 7 பொருத்தம் 10 க்கு 5 பொருத்தம், பத்துக்கு 10 பொருத்தம் என்று பார்ப்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் அவையெல்லாம் வெறும் 5 சதவீதம்தான். காரணம் அதை தசவித பொருத்தம் என்று நாம் சொல்வோம்.
வரனின் தசாபுத்தி என்ன, அந்த ஜாதகத்தின் வளர்ச்சி உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்
நீங்கள் ஒரு திருமணத்தை நடத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு வந்திருக்கும் வரனின் தசாபுத்தி என்ன, அந்த ஜாதகத்தின் வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்து வைக்க வேண்டாம்.
கன பொருத்தம் உள்ளிட்ட பலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது.
காரணம், அதில் கன பொருத்தம் உள்ளிட்ட பலவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது. அவற்றையும் நாம் பார்க்க வேண்டும். இரண்டு வெவ்வேறு குண நலன்களை கொண்ட நபர்களை இணைக்கும் பட்சத்தில், இருவரும் வெவ்வேறு விதமாக வாழ்வார்கள்; அப்படி வாழும் பொழுது, அவர்களுக்குள்ளே ஒரு நிம்மதியான வாழ்க்கையானது இருக்காது.
ஏழரைச் சனியை எதிர்கொள்கிறார்களா, அஷ்டமத்து சனியை எதிர்கொள்கிறார்களா..? - பார்க்க வேண்டியவை என்ன?
ஆகையால் ஒரு ஆண் மகனோ அல்லது பெண்ணோ திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றால், அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கிறது, அடுத்தடுத்து வரும் காலங்களில் அவர்கள் ஏழரைச் சனியை எதிர்கொள்கிறார்களா, அஷ்டமத்து சனியை எதிர்கொள்கிறார்களா.. அதன் மூலம் அவர்கள் பாதிக்கப்படுவார்களா.. விவாகரத்து வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா..? பிரிவினை நோக்கி செல்வார்களா..? உள்ளிட்ட அனைத்தையுமே நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடும் பட்சத்தில், கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய தொந்தரவுகள் குறையும். ஸ்ரீ வாஞ்சி கோயிலுக்கு சென்று வருவதும் நல்ல பலன்களை கொடுக்கும். சிவகாசிக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய திருத்தங்கலுக்கு சென்று வரலாம். ” என்று பேசினார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்