சனி நட்சத்திரத்தில் நுழைந்த சூரியன்! 5 ராசிகளுக்கு அதிஷ்டம் அடிக்குது!
இன்றைய தினம் சூரிய பகவான் அனுஷம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகி உள்ளார். இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை சூரிய பகவான் இந்த நட்சத்திரத்தில் இருப்பார்.
ஜோதிட விதிகளின் படி சூரிய பகவான் மாதம் தோறும் பெயர்ச்சி ஆகும் கிரகம் ஆகும். கிரகங்களின் ராஜாவான சூரிய பகவானின் பெயர்ச்சியை பொறுத்தே மாதங்கள் கணக்கிடப்படுகின்றன.
இன்றைய தினம் சூரிய பகவான் அனுஷம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகி உள்ளார். இன்று முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை சூரிய பகவான் இந்த நட்சத்திரத்தில் இருப்பார்.
அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் ஆவார். சனி பகவானுக்கும் சூரியனுக்கும் இடையே மகன்-தந்தை உறவு உள்ளது. மகன் சனிபகவான் ராசியில் தந்தை சூரியனின் வருகையால் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சூரிய பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி பசில ராசிக்காரர்களுக்கு திடீர் பணப் பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் பெருகும்.
1. மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு வீட்டிலும், சமூகத்திலும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பால் உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும்.
2. மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி நன்மைகளை தரும். வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தை விரிவு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும்.
3. கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மங்களம் தருவதாக இருக்கும். தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் செயல்பாடுகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். முதலீட்டில் லாபம் கிடைக்கும். கடினமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.
4. தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். எதிரிகளை வெல்வீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
5. மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டில் உயர்க்கல்வி படிக்க மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். . சமூகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிதி ரீதியாக சிறப்பாக செயல்படுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.