Political Astrology: ’அரசியலில் கொடிக்கட்டி பறக்கும் யோகம் எந்த ராசிக்கு?’ இதோ முழு விவரம்!
”உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு உள்ளார் என்று அறிந்து கொள்வதன் மூலம் அரசியல் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் கெடாமல் உள்ளரா என்பதை ஆராய்வது அவசியம்”
ஒருவர் அரசியலில் வெற்றி பெற வேண்டும் எனில் ராஜ கிரகங்கள் எனப்படும் சூரியன் மற்றும் செவ்வாய் மற்றும் சனி ஆகியோரது பலம் அவசியம் ஆகும்.
மக்களாட்சி முறை தோன்று முன்னர் ஒருவரது செவ்வாய் வலுவாக உள்ள ஜாதகரால் அரசியல் அதிகாரத்தை பிடிக்கும் நிலை இருந்தது. போர் கிரகமாக அறியப்படும் செவ்வாய் கிரகம் நிலத்திற்குகாரகன் ஆவார், அடாவடி செயல், வன்முறை, போர் உள்ளிட்ட செயல்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் நிறைய நடந்துள்ளன.
ஆனால் உலகம் முழுவதும் ஜனநாயகம் மலர்ந்துவிட்ட நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் மக்களின்காரகன் ஆன சனி பகவானின் பலம் உள்ள ஜாதகரால் மட்டுமே அரசியல் அதிகாரத்தை சுவைக்க முடியும் என்கிறார் ஜோதிடர் எம்.பாலசுப்பிரமணியன்.
உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு உள்ளார் என்று அறிந்து கொள்வதன் மூலம் அரசியல் வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ள முடியும். உங்கள் ஜாதகத்தில் சூரியன் கெடாமல் உள்ளரா என்பதை ஆராய்வது அவசியம்.
உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருந்தால் சூரியன் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் மேற்கண்ட இடங்கள் துலாம் ராசியாக இருக்க கூடாது. அப்படி துலாம் ராசியாக இருந்தால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகம் அமையும் வாய்ப்பு உள்ளதா என பார்க்க வேண்டும்.
அடுத்ததாக மதிநுட்பகாரகன் ஆன சந்திரன் பலம் அவசியம், உங்கள் லக்னத்தில் இருந்து சந்திரன் மறைந்து இருக்க கூடாது.
8ஆம் இடத்திலேயோ அல்லது 12ஆம் இடத்திலேயே சந்திரன் இருந்தால் மதிநுட்பம் வேலை செய்யாது. இது அரசியலுக்கு ஏற்றது இல்லை.
மற்ற இடங்களில் சந்திரன் அமர்ந்து இருந்தால் ஓரளவு பரவாய் இல்லை, உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் பெறும் இடத்தில் இருந்தால் மிக சிறப்பானதாக இருக்கும்.
அதே வேலையில் சூரியனோ, சந்திரனோ இருக்கும் வீட்டில் ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருக்க கூடாது. ராகு, கேதுக்கள் பிடியில் இருந்தால் அரசியலில் மேலே வருவது மிக கடினம்.
அரசியலில் வருவதற்கு முக்கியமாக உங்கள் லக்னாபதிபதி பலமாக இருப்பது அவசியம், உங்கள் லக்னாதிபதி மறைவு ஸ்தானம் எனப்படும் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைய கூடாது.
லக்னாதிபதியின் சாரம், சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் ஏதெனும் ஒரு சாரத்தை பெற்றுவிட்டால் பலம் கூடுவதாக இருக்கும்.
ஒருவர் அரசியலில் வெற்றி பெற சனி பகவானின் பலம் முக்கியமாக தேவை, சனி பகவான் லக்னத்திற்கு 3, 7, 10, 11ஆம் இடங்களில் இருந்தால் சனி பலமாக உள்ளார் என்று பொருள், சனி பலமாக இருந்தால் அரசியலில் தைரியமாக குதிக்கலாம். ஆனால் சனி அஸ்தங்கம் ஆனாலோ, வக்ரம் ஆனாலோ, நீசம் ஆனாலோ அரசியலில் நுழையக்கூடாது. அதே போல் உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் ராகு, கேதுக்கள் உடன் இருக்க கூடாது.
சூரியன், குரு ஆகியோர் உடன் இணைந்து சனி இருந்தால் அந்த ஜாதகர் அரசியலுக்கு பலமானவர் ஆக இருப்பார்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.