அஸ்வினி நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அஸ்வினி நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!

அஸ்வினி நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 14, 2025 09:48 AM IST

அஸ்வினி நட்சத்திர அதிபதியான கேது 10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டாலும், அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியுடன் தொடர்பு கொள்வதாலும், மருத்துவத்துறை, ராணுவம், காவல்துறை, வழக்கறிஞர், இருப்பு சார்ந்த துறைகளில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும்.

அஸ்வின் நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!
அஸ்வின் நட்சத்திரம்: ‘அறிந்ததும்.. அறியாததும்.. புரிந்ததும்.. புரியாததும்’ ஜோதிடர் சொல்லும் விபரம்!

இது போன்ற போட்டோக்கள்

அஸ்வினி நட்சத்திரம்:

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேதுபகவான். மேஷ ராசியில் 0 முதல் 13 பாகை 20 கலை வரை (0 - 13.20 டிகிரி) பரவியிருக்கும். அஸ்வினி நட்சத்திரத்தின் உருவ அமைப்பு குதிரை முகம் கொண்டதாக இருக்கும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிதேவதை சரஸ்வதி தேவி. அஸ்வினியில் பிறந்தவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதும், ஆண் குதிரைக்கும், ராஜாளி பறவைக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது சிறப்பு. சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். எட்டி மரத்தை நட்டு வளர்ப்பது சிறந்த பலனை தரும்.

வணங்க வேண்டிய ஆலயங்கள் :

எட்டி மரம் ஸ்தல விருட்சமாக உள்ள கோயில்களான ஸ்ரீரங்கம், ஊத்தங்கரை, கூத்தனூர், கொல்லிமலை ஆகிய கோயில்களில் வழிபாடு செய்வது சிறப்பு.

நோய்கள் :

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. தலைவலி, டென்ஷன், மனஉளைச்சலால் அவதிப்படுவார்கள். அம்மை, மலேரியா தாக்கவும் வாய்ப்புள்ளது.

கல்வி :

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், வழக்கறிஞர், பி.இ., மெக்கானிக்கல், கெமிக்கல் போன்ற துறைகள் சார்ந்த படிப்பை படிப்பார்கள். இதற்கு லக்னத்திற்கு 2, 4 பாவங்களையும், அந்த பாவ அதிபதிகளின் நிலைகளையும் கருத்தில் கொள்வது அவசியம்.

வேலைவாய்ப்பு, வியாபாரம் :

அஸ்வினி நட்சத்திர அதிபதியான கேது 10-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டாலும், அஸ்வினி நட்சத்திரம் மேஷ ராசியுடன் தொடர்பு கொள்வதாலும், மருத்துவத்துறை, ராணுவம், காவல்துறை, வழக்கறிஞர், இருப்பு சார்ந்த துறைகளில் பணிப்புரியும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இரும்பு உலோகம், எண்ணெய், எஃகு, உளுந்து மொத்த விாயபாரம், கழிவுப்பொருள், வைக்கோல், தவிடு, கிரேவல், கனரக வாகனம், ஆட்டோ, டிரக், எலெக்ட்ரிக், ஹார்டுவேர், சுரங்க வேலை தொழில்கள் அமையும். இத்துடன், 2, 6, 10ம் பாவங்கள், அதன் அதிபதிகளின் நிலைகளையும், நடப்பு தசா புத்தியையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்: ஜோதிட சிரோன்மணி ஆர்.கே.வெங்கடேஸ்வர், மெயில்:astrovenkataeswar@gmail.com, மொபைல்: 91590 13118

குறிப்பு : இந்த கட்டுரை, கட்டுரையாளரின் கருத்துக்களின் அடிப்படையில் வெளியானதாகும். இதன் உண்மை தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பாகாது.