Astro Tips: சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் என்பது உண்மையா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips: சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் என்பது உண்மையா?

Astro Tips: சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு நீடிக்கும் என்பது உண்மையா?

Pandeeswari Gurusamy HT Tamil
Nov 21, 2023 07:30 AM IST

உண்மையில் தலை முடிக்கு அதிபதி என்பது சனியினை குறிக்கும். சனிதான் தலை முடி மேல் ஆதிக்கம் செலுத்தும் கிரகம்.

சாப்பாடில் முடி இருந்தால் சனி பகவான் தாக்கம் அதிகம்
சாப்பாடில் முடி இருந்தால் சனி பகவான் தாக்கம் அதிகம்

உண்மையில் தலை முடிக்கு அதிபதி என்பது சனியினை குறிக்கும். சனிதான் தலை முடி மேல் ஆதிக்கம் செலுத்தும் கிரகம்.

ஆனால் சாப்பாட்டில் முடி விழும்போது கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை வந்து விடும் என்பதால் மனைவிக்கும் உனக்கும் ஆன பந்தம் நீடிக்கும். அல்லது உனக்கு சாதம் பரிமாறும் தாயாருக்கும் உனக்கும் இடையிலான பாசம் நீடிக்கும் என்று செல்லப்பட்டது. காரணம் சாப்பாடு பரிமாறுபவர் மீது சாப்பிடும் நபர் கோபப்பட்டு விட கூடாது என்பதற்காகவே இது சொல்லப்பட்டது. ஆனால் இதில் ஜோதிட ரீதியாகவோ அறிவியல் ரீதியாகவோ எந்த உண்மையும் இல்லை.

பொதுவாக உணவை பொறுத்த மட்டில் அதை சமைப்பவர்கள் எந்த மனநிலையில் இருப்பார்களோ அந்த எண்ணங்களின் ஓட்டம் கூட உணவை சாப்பிடுபவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகிறது.

தலைமுடி மேல் ஆதிக்கம் செலுத்த கூடிய கிரகம் சனி என்பதால் தான் வீட்டில் ஏதோ மூலையில் முடி இருந்தால் கூட வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்லப்பட்டது. இதனால் தான் அந்த காலத்தில் தலைமுடியை சீவுவது கூட வீட்டில் இருந்து செய்ய மாட்டார்கள். வெளியே தோட்டத்து பக்கம் போய் விடுவர். காரணம் தலைமுடி வீட்டிற்கு வெளியே விழுந்தால் அது வீட்டிற்கு வெயியே போய்விடும். சனிகிரகத்தால் எந்த பாதிப்பும் நம் குடும்பத்திற்கு இருக்காது என்று நம்பப்பட்டது.

அப்படி முடி வீட்டிற்கு உள் இருந்தாலே தரித்திரம் என்றால் அது நம் சமயலைறைக்கு போனால் எவ்வளவு பாதிப்பை தரும் . அதுவும் நாம் உண்ணும் சாப்பாட்டிலேயே இருந்தால் அது எத்தனை பிரச்சனைகள் தரும் என்று யோசியுங்கள்.

அதனால் நாம் சமைக்கும் உணவில் இனி வரும் காலங்களில் முடி விழுந்து விடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner