Astro Tips : மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் செல்வம் பெருக வெள்ளி கிழமை எப்படி விளக்கேற்றலாம் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் செல்வம் பெருக வெள்ளி கிழமை எப்படி விளக்கேற்றலாம் பாருங்க!

Astro Tips : மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் செல்வம் பெருக வெள்ளி கிழமை எப்படி விளக்கேற்றலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 24, 2025 11:09 AM IST

Astro Tips : வெள்ளிக்கிழமைகளில் இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருப்பாள். மகாலட்சுமியின் அருளால் செல்வம் பெருகும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

Astro Tips : மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் செல்வம் பெருக வெள்ளி கிழமை எப்படி விளக்கேற்றலாம் பாருங்க!
Astro Tips : மகாலட்சுமியின் அருள் பெற வீட்டில் செல்வம் பெருக வெள்ளி கிழமை எப்படி விளக்கேற்றலாம் பாருங்க! (pinterest)

இது போன்ற போட்டோக்கள்

பணத்திற்கு பஞ்சமும் இருக்காது. வெள்ளிக்கிழமைகளில் இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும். மகாலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருப்பாள். மகாலட்சுமியின் அருளால் செல்வம் பெருகும். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

வெள்ளிக்கிழமைகளில் இப்படி செய்தால் மகாலட்சுமியின் அருளைப் பெறலாம்

  1. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் அருளைப் பெற நீங்கள் இவ்வாறு விளக்கேற்ற வேண்டும். ஐந்து வெற்றிலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். ஐந்து வெற்றிலைகளிலும் சந்தனம் பூசி, மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைக்க வேண்டும்.
  2. பின்னர் வெற்றிலைகளை வட்டமாக அடுக்கி, அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைக்க வேண்டும்.
  3. மண் அகல் விளக்கையும் குங்குமம் , சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
  4. அந்த மண் அகல் விளக்கில் கல் உப்பைப் போட்டு, அதிலும் மஞ்சள், குங்குமம் சேர்க்க வேண்டும்.
  5. கல் உப்பை நிறைய போட வேண்டும்.
  6. பின்னர் மற்றொரு அகல் விளக்கை எடுத்து அதில் பசு நெய்யை ஊற்றி, இரண்டு திரிகளை ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்ட விளக்கின் மேல் வைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
  7. பின்னர் இந்த விளக்கைச் சுற்றி பூக்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
  8. இந்த விளக்கிற்கு தீபாராதனை காட்டி, அட்சதையும் தூவி வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைத்து நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம். உங்கள் வீட்டில் செல்லம் பெரும்.

வெள்ளிக்கிழமை மாலையில் இவற்றைப் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்

  1. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் அருளைப் பெற பசுக்களுக்கு பச்சைப் புல்லை உணவாகக் கொடுத்தால் நல்லது. அல்லது நெய், வெல்லம் கலந்த உணவைக் கொடுக்கலாம்.
  2. வெள்ளிக்கிழமை தூங்கும் முன் மகாலட்சுமி சிலைக்கு மல்லிகைப் பூக்களைப் படைத்தால் நல்லது. பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.
  3. திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தால் மகாலட்சுமிக்கு ரோஜாப் பூக்களைப் படைத்தால் நல்லது. தாம்பத்ய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
  4. வெள்ளிக்கிழமை மாலையில் மகாலட்சுமியின் முன் ஐந்து விளக்குகளை ஏற்றி, தீபாராதனை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை பஞ்சமுகி தீபம் என்று அழைப்பார்கள். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். மகிழ்ச்சியாக வாழலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்