Astro Tips : நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா.. மாவிளக்கு நேர்த்திக்கடனின் சிறப்புகளும்.. பலன்களும் இதோ !
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா.. மாவிளக்கு நேர்த்திக்கடனின் சிறப்புகளும்.. பலன்களும் இதோ !

Astro Tips : நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா.. மாவிளக்கு நேர்த்திக்கடனின் சிறப்புகளும்.. பலன்களும் இதோ !

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2025 08:51 PM IST

Astro Tips : உடலில் நோய்கள் ஏற்படும் போது உங்களுக்கு இஷ்டமான அம்மனிடம் வேண்டுதல் வைக்கலாம். வேண்டுதல் நிறைவேறிய பின் நீங்கள் ஒரு நல்ல நாளில் கோயிலுக்கு சென்று மாவிளக்கு போட்டு கோயிலில் படுத்து வாழை இலையில் வைத்த மாவிளக்கை பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் சிறிது நேரம் வைத்து எரிய விட்டு அம்மனை வழிபடலாம்.

மாவிளக்கு வழிபாடு
மாவிளக்கு வழிபாடு

மாவிளக்கு பெரும்பாலும் அம்மாளுக்கு செய்யப்படும் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்று. அது மட்டும் இல்லாமல் நம் வீட்டில் நடக்கும் திருமணம், சீமந்தம், புது மனை புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு முன் குல தெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறோம். இப்படி செய்வதால் நாம் எடுத்த காரியம் தடைகள் இன்றி நடை பெறும் என்பது ஐதீகம். பலர் தங்களுக்கு சில காரியங்கள் நிறைவேற வேண்டும் என மாவிளக்கு நேர்த்தி கடன் வைக்கிறார்கள். அந்த விஷயங்கள் நடை பெற்ற உடன் நோர்த்திக்கடனாக வேண்டிய மாவிளக்கை செய்து வணங்குகின்றனர். மாவிளக்கு செய்முறை மற்றும் சிறப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாவிளக்கு ஏன்

எடுத்த காரியம் தடையின்றி வெற்றிகரமாக சிறப்பாக நடக்க வேண்டும் என எண்ணி மாவிளக்கு வழிபாடு செய்யப்படுவது ஐதீகம்.

மாவிளக்கு செய்முறை

பச்சரிசி மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரையை உருட்டி அதில் கொஞ்சம் நெய்விட்டு மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். அந்த மாவை ஒரு மாவிளக்கு பாத்திரம் அல்லது வாழை இழையின் நடுவில் பரப்பி கொள்ள வேண்டும். அதில் மேல் பகுதியில் சிறிய குழி போட்டு அதில் நெய் வட்டு திரி வைக்க வேண்டும். இதை அம்மன் சன்னதியில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

நினைத்த காரியம் நிறைவேற

நீங்கள் வாழ்வில் முன்னேற ஒரு காரியத்தை செய்யும் போது அது வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என அம்மனை மனம் உருகி வேண்டி இந்த மாவிளக்கு போட்டு வழிபாடு செய்யலாம்

உடல் பிரச்சனைகள் போக்க

உடலில் நோய்கள் ஏற்படும் போது உங்களுக்கு இஷ்டமான அம்மனிடம் வேண்டுதல் வைத்து கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறிய பின் நீங்கள் ஒரு நல்ல நாளில் கோயிலுக்கு சென்று மாவிளக்கு போட்டு கோயிலில் படுத்து வாழை இலையில் வைத்த மாவிளக்கை பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் சிறிது நேரம் வைத்து எரிய விட்டு அம்மனை வழிபடலாம். இது அம்மன் வழிபாடுகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்