Astro Tips : வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருக.. லட்சுமி தேவியின் அருளை பெற காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருக.. லட்சுமி தேவியின் அருளை பெற காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ

Astro Tips : வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருக.. லட்சுமி தேவியின் அருளை பெற காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 28, 2025 06:30 AM IST

Astro Tips : காலையில் மனநிலை பாதிக்கப்பட்டால் அன்றைய நாள் முழுவதும் மனநிலை மோசமாக இருப்பதாக உணர்வோம். ஆனால் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்தால் லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். உங்கள் நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது அதிர்ஷ்டமாகவோ மாற்ற சில விஷயங்களை செய்யுங்கள்

Astro Tips : வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருக.. லட்சுமி தேவியின் அருளை பெற காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ
Astro Tips : வீட்டில் மகிழ்ச்சியும், ஐஸ்வர்யமும் பெருக.. லட்சுமி தேவியின் அருளை பெற காலையில் செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் என்ன செய்கிறோம் என்பது நம் நாளை தீர்மானிக்கிறது. நாம் காலையில் எவ்வளவு நேர்மறையாக இருக்கிறோமோ, அவ்வளவு சிறப்பாக நாள் செல்கிறது. காலையில் மனநிலை பாதிக்கப்பட்டால் அன்றைய நாள் முழுவதும் மனநிலை மோசமாக இருப்பதாக உணர்வோம். ஆனால் காலையில் எழுந்து சில விஷயங்களை செய்தால் லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். உங்கள் நாளை மகிழ்ச்சியாகவோ அல்லது அதிர்ஷ்டமாகவோ மாற்ற சில விஷயங்களை செய்யுங்கள்

ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் ஒருபோதும் நிதி நெருக்கடியை சந்திக்க விரும்புவதில்லை. ஆனால் சிலருக்கு எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பணம் நிலைக்காது. அதற்கு உழைப்புடன் அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. நீங்கள் அதிர்ஷ்டம் பெற வேண்டுமானால், தினமும் இவற்றை செய்தால், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இனி அதிர்ஷ்டத்தைத் தரும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

உள்ளங்கை

நீங்கள் எழுந்தவுடன் முதலில் கண்களைத் திறந்து உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து உள்ளங்கைகளைப் பாருங்கள். கைகளைப் பார்த்து.. கர தர்ம மந்திரத்தை உச்சரிக்கவும். இதைச் செய்த பிறகு, உள்ளங்கைகளை முகத்தை நோக்கித் திருப்ப வேண்டும். இவ்வாறு செய்தால் லட்சுமி மற்றும் சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மந்திரம் தெரியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கலாம்.

பூமிக்கு வணக்கம்..

காலையில் உள்ளங்கைகளைப் பார்த்துவிட்டு.. கால்களை தரையில் வைக்கும் முன் பூமியைக் கும்பிடுங்கள். இப்படி செய்வதால் நாள் முழுவதும் நீங்கள் நேர்மறையாக இருப்பீர்கள் என்று கூறப்படுகிறது. பூமி நம் பாரத்தை சுமக்கிறது. எனவே பூமிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

சூரிய கடவுள் நீர்

சூரிய உதயத்திற்கு முன் எழுந்து மலம் கழிக்க வேண்டும்.. பிறகு குளித்து முடித்து சுத்தமான ஆடைகளை அணிந்த பிறகு சூரிய பகவானுக்கு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் சமர்பிக்கவும். சூரியனுக்குப் படைக்கப்பட்ட நீரில் சிவப்பு நிறப் பூக்களைக் கலந்து கொடுப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அந்த சமயத்தில் ஓம் சூர்யாய நமஹ் என்ற மந்திரத்தை உச்சரித்து.. சூரிய பகவானுக்கு நீர் வழங்குங்கள். இது உங்களை நாள் முழுவதும் நேர்மறை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

துளசி நீர்

துளசி செடிக்கு நீர் விடுங்கள். துளசிக்கு நீர் விடும் போது 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்று ஜபிக்கவும். துளசிக்கு நீராடிவிட்டு அதன் கீழ் தீபம் ஏற்ற வேண்டும். இதை தினமும் காலையில் செய்வதால் லட்சுமி தேவியுடன் விஷ்ணுவின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சூரிய உதயத்திற்கு முன் சுத்தம் செய்யுங்கள்..

வாஸ்து சாஸ்திரத்தின் படி.. சூரிய உதயத்திற்கு முன் தண்ணீரில் உப்பு சேர்த்து வீட்டை துடைப்பது எதிர்மறை சக்தியை நீக்குகிறது. அதோடு வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும்.

இந்த குறிப்புகள் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் காலையில் உங்களுக்கு நேர்மறையான அதிர்வுகளை வழங்குவதோடு அவை உங்கள் நாளை சோம்பேறித்தனமாக இல்லாமல் சுறுசுறுப்பாக மாற்ற உதவும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்