Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!

Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Published Feb 07, 2025 05:30 AM IST

Astro Tips : கோயில் கொடிமரத்தின் முன் நின்று நமது வேண்டுதலை முன்வைக்க வேண்டும். உன்னைத்தான் நம்பி உள்ளேன் வேறு வழி இல்லை எனக்கு. இதை நீ கொடுத்தே ஆக வேண்டும் என்று சரணாகதி அடைவது போல் விழுந்து கும்பிட வேண்டும் என ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையற்கரசி குறிப்பிட்டுள்ளார்.

Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!
Astro Tips : கோயிலுக்கு செல்லும் போது நம் வேண்டுதலை முன்வைக்க வேண்டிய இடம் எது தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்! (Pixabay)

இது போன்ற போட்டோக்கள்

கோயில்களில் நேராக உள்ளே செல்லும்போது, ஒரு சிவன் கோயில் என்றால் ஒரு விநாயகர் சன்னதி இருக்கும். பிறகு முருகன், அம்பாள், சிவன் என்று ஒவ்வொரு சன்னதியாக இருக்கும். இப்படி ஒவ்வொரு சன்னதியிலும் சிலர் தங்களது வேண்டுதலை முன்வைப்பார்கள். சிலர் எதுவுமே வேண்டாமல் கும்பிடுவார்கள். இது அவர்களின் பக்குவப்பட்ட மனதில் வெளிப்பாடு. ஆனால் நாம் வேண்டுதலை கேட்பதில் ஒன்றும் தவறில்லை. எது வேண்டுமானாலும் கடவுளிடம் நாம் கேட்கலாம். ஆனால் அப்படி கேட்பதற்கு ஒரு ஒரு இடம் இருக்கா என்றால் நிச்சயமாக உள்ளது.

நன்றி சொல்ல வேண்டும்

அதுதான் கோயிலின் கொடிமரம். அப்படி என்றால் சன்னிதானத்தில் இறைவன் முன் நின்று நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். விநாயகர், முருகன், அம்பாள் அல்லது பிற தெய்வங்களாக இருந்தாலும் மூலஸ்தானத்தில் உள்ள பிரதான கருவறை தெய்வமாக இருந்தாலும் எந்த தெய்வமாக இருந்தாலும் அந்த தெய்வத்திற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அன்றாடம் நமது வாழ்க்கையில் வாழ்வதற்கு உண்டான அனைத்து விஷயங்களும் அந்த தெய்வீக அருளால் நமக்கு கிடைக்கிறது.

மாணிக்கவாசகர் ஓரிடத்தில் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சொல்வார்.. இது அவரை வணங்குவதற்கு கூட அவர் அருள் கண்டிப்பாக அவசியம் எனும் போது அன்றாடம் நாம் வாழ்கிறோம். நாம் இரவில் தூங்குகிறோம். காலையில் எழுந்திருக்கிறோம். எதை நம்பி தூங்கினோம்.. எப்படி எழுந்தோம்.. நமக்கு தெரியாது.. அப்படி அங்கேயும் இறையருள்தான் நம்மை காப்பாற்றியது. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரை நமக்கு அரணாக இருந்து நம்மை காப்பாற்றக்கூடிய இறைவனுக்கு நாம் நன்றி தெரிவிக்கும் இடம்தான் அந்த சன்னதி.

எப்படி வணங்கவேண்டும்

கோயில் சன்னதிக்கு போனீர்கள் என்றால் இறைவனை கண்ணார காணுங்கள். சன்னதியின் முன்னின்று கண்களை மூடிக்கொள்ள கூடாது. கடவுளின் அலங்காரத்தை பார்த்து ரசித்து கடவுளுக்கும் நமக்கும் சொல்ல முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. எத்தனை தான் நான் வாய் வார்த்தையினால் விளக்கி சொன்னாலும் அந்த இடத்தில் நின்று அனுபவிப்பது என்பது வேறு. அந்த இடத்தில் நின்று பாருங்கள். உங்களுக்குள் ஒரு தெய்வீக ஆற்றல் இருக்கும். அந்த ஆற்றலை உங்களது உடலுக்குள் முழுமையாக உள் வாங்க வேண்டும். நல்ல மனம் முழுக்க அந்த இறைவனின் அற்புதமான திருவுருவத்தை மனதில் நிரப்பி கொண்டு அவருக்கு உள்ளன்போடு நன்றி சொல்லுங்கள்.

கடவுளே எத்தனையோ ஜீவராசிகள் எவ்வளவோ உயிர்கள் இந்த உலகத்தில் உள்ளது என்னை உன் சன்னதிக்கு முன் நிற்க வைத்து இருக்கிறாயே.. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தாயே என்று இறைவனுக்கு நன்றி சொல்லலாம். ஏதோ ஒரு நல்ல காரியம் உங்கள் வாழ்வில் நடந்திருந்தால் அதற்கு நன்றி சொல்லலாம். இதை சாமியை கண்ணாரப் பார்த்து அழுகை வந்தால் அழுது உள்ளன்போடு ரசித்து வழிபடுங்கள். இன்ப துன்பங்கள் எல்லாவற்றையும் ஒரு நண்பனை பார்த்தவுடன் எப்படி கொட்டி தீர்க்கிறோமோ அதுபோல் சுவாமி இடம் நன்றி தெரிவித்து விட்டு வரக்கூடிய இடம்தான் சன்னிதானம்.

அந்த சன்னிதானத்தில் கருவறையில் உங்கள் வழிபாட்டை நிறைவு பண்ணிவிட்டு கோயிலை முழுவதும் சுற்றி முடித்து வந்தீர்கள் என்றால் அங்கு கொடிமரம் இருக்கும். ஒரு ஆலயத்தில் மிகப் பிரதானமான இடம் என்றால் கொடிமரம். மனிதன் நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் முதுகுத்தண்டு. அந்த முதுகுத்தண்டு போல தான் அங்கே ஆலயம் யோக அமைப்பில் உடலையும் ஆலயத்தையும் ஒன்றாக நீங்கள் பார்க்கலாம், யோக சாஸ்திரத்திலே மேலே ஏறக்கூடிய நாசிக் காற்றை அந்த குண்டலி யோகம் சுழு முனையில் வளைந்து வளைந்து போகும். இது யோகத்தினுடைய அமைப்பு. யோக சாஸ்திரத்தின் உடைய அமைப்பும், கோயில் கொடி மரத்தின் உடைய அமைப்பு ஒன்று. அந்த கொடி மரத்தின் முன் வந்து நிற்க வேண்டும். அதன் முன்னிருக்கும் பலிபீடத்தில் நமது ஆசை, பகை,கோபம், என ஏதோ ஒன்றை கடவுளிடம் பலியிட்டு விட்டு நாம் என்ன பிரார்த்தனை வைக்க வந்தோமோ அதை கேட்க வேண்டும்.

கொடிமரத்தின் முன் விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். நான் உன்னைத்தான் நம்பி உள்ளேன் வேறு வழி இல்லை எனக்கு. இதை நீ கொடுத்தே ஆக வேண்டும் என்று சரணாகதி அடைவது போல் விழுந்து கும்பிட வேண்டும். அதனால் அந்த கொடி மரத்துக்கு அருகில் நமது வேண்டுதலை செய்தால் அது நிச்சயமாக நடைபெறும் என்பது நம்பிக்கை. கொடிமரம் இல்லாத கோயில் என்றால் சாமிக்கு முன் பலிபீடம் என்று ஒன்று இருக்கும். அது இல்லாத கோவில் இருக்காது அந்த பலிபீடத்திற்கு முன் நின்று நமது பிரார்த்தனையை தெரிவிக்கலாம். பலிபீடம் கூட இல்லாத தெருவோர சிறிய விநாயகர் கோயில் போன்ற இடங்களில் நாம் விநாயகரிடம் கூட நமது பிரார்த்தனையை தெரிவிக்கலாம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்