Astro Tips: ஆத்தி.. அய்யோன்னு சொல்றதால இத்தனை பெரிய பிரச்சனை வருமா?
நாம் வீடு, பள்ளி, பணி செய்யும் இடம் போன்ற இடங்களில் ஏன் எப்போதுமே நம்மை சுற்றி அஷ்ட தேவதைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் நாம் ஒரு வார்த்தையை சொல்லும் போது ததாஸ்து என்று சொன்னால் அது அப்படியே நடந்து விடும் என்று செல்லப்படுகிறது.
வீடு, பணி செய்யும் இடம், வியாபாரம் செய்யும் இடங்களிலும் நாம் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் உள்ளன. அந்த வார்த்தைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்று பெரியவர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அது குறித்து நாம் யோசித்தது உண்டா.
நாம் வீடு, பள்ளி, பணி செய்யும் இடம் போன்ற இடங்களில் ஏன் எப்போதுமே நம்மை சுற்றி அஷ்ட தேவதைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் நாம் ஒரு வார்த்தையை சொல்லும் போது ததாஸ்து என்று சொன்னால் அது அப்படியே நடந்து விடும் என்று செல்லப்படுகிறது.
நாம் ஒரு கெட்ட வார்த்தையை சொல்லும் போது அவர்கள் ததாஸ்து என்று சொல்லி விட்டால் அது அப்படியே நடந்து விடும். அதனால் நாம் அஷ்ட தேவதைகளுக்கு பயந்து எப்போதும் சொல்லக்கூடாத சார்த்தைகளை பற்றி பார்க்கலாம்.
இல்லை
நாம் எப்போதும் இல்லை என்ற வார்தையை பயன்படுத்த கூடாது. என்னிடம் அது இல்லை, இது இல்லை காசு இல்லை. என்ற வார்தை வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. அதற்கு பதிலாக பால் வாங்க வேண்டும். நெய் வாங்க வேண்டும் என்பது போன்று பாசிட்டீவ் தொனியில் பேச வேண்டும். இதில் வியாபாரம் பண்ணும் கடைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சனியனே என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது
குழந்தைகள் பெரியவர்களை சனியனே என்று சொல்லகூடாது. சனியனே என்று மீண்டும் மீண்டும் சொன்னால் சனிபகவான் நமக்கு மேலும் துயரத்தை தருவார் என்று நம்ப படுகிறது.
குழந்தைகளை நீ கஷ்ட பட வேண்டும் என்பது போல் திட்டக்கூடாது. அது ஒரு கட்டத்தில் நடந்து விடும். அதனால் அப்படி திட்ட கூடாது
மூதேவி
குழந்தைகளை மூதேவி என்று சொல்லி திட்ட கூடாது
அய்யோ
அய்யோ என்ற வார்த்தையை நம்மில் சிலர் அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அப்படி சொல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காரணம் அய்யோ என்பது எமதர்ம ராஜாவின் மனைவியின் பெயர் ஆகும். நாம் அடிக்கடி சொன்னால் அது நமக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எம தர்மன் என் மனைவியின் பெயரை அடிக்கடி சொல்கிறாய் என்னோடு வா என்று அழைத்து கொள்வார் என நம்பப்படுகிறது.
குலம் குறித்து திட்டக்கூடாது
யாரையும் அவர் சார்ந்த குலம் குறித்து திட்ட கூடாது சாபம் கொடுக்கும் யாரையும் பேசக்கூடாது. அதேபோல் நான் சுத்தமாக துடைத்து விட்டேன். காலி செய்து விட்டேன் என்ற எப்போதும் அபச குணமாக பேச கூடாது.
அதனால் நாம் எப்போது மங்கலம் தரும் வார்த்தைகளை பேச வேண்டும். அமங்கலமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். இளம் வயதில் இருந்தே நம் குழந்தைகளுக்கும் இதை சொல்லி வளர்க்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்