Astro Tips : இறைவனை வணங்கும் போது நம்மையே அறியாமல் கண்ணீர் வர காரணம் என்ன தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astro Tips : இறைவனை வணங்கும் போது நம்மையே அறியாமல் கண்ணீர் வர காரணம் என்ன தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!

Astro Tips : இறைவனை வணங்கும் போது நம்மையே அறியாமல் கண்ணீர் வர காரணம் என்ன தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 03, 2025 06:45 AM IST

Astro Tips : கோவில் அல்லது வீடுகளில் நாம் கடவுளை வணங்கும்போது நமது கண்களில் கண்ணீர் வருவதற்கு காரணம் என்ன என்று நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா.. இது குறித்து ஆத்ம ஞான மையம் youtube சேனலில் ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி விரைவான விளக்கம் அளித்துள்ளார்.

Astro Tips : இறைவனை வணங்கும் போது நம்மையே அறியாமல் கண்ணீர் வர காரணம் என்ன தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்!
Astro Tips : இறைவனை வணங்கும் போது நம்மையே அறியாமல் கண்ணீர் வர காரணம் என்ன தெரியுமா.. ஆன்மீக சொற்பொழிவாளர் விளக்கம்! (அழகிய மணவாள தாசன் Facebook)

இது போன்ற போட்டோக்கள்

அதில் "இந்த உலகில் நமக்கு துன்பம் வரும்போது கண்களில் இருந்து கண்ணீர் வருவது இயற்கையான ஒன்று. ஆனால் சில நேரங்களில் அதீத சந்தோஷத்திலும் கண்களில் இருந்து கண்ணீர் வரும் என்பதும் இயற்கையான ஒன்றுதான். இந்த ஆனந்தத்திலேயேயும், துன்பத்திலேயும் வருகின்ற தண்ணீரைத் தாண்டி இறைவனின் சன்னதி முன்பாக நாம் நிற்கும்போது காரணமே தெரியாமல் சிலருக்கு கண்ணீர் வருகிறது. அதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், ஆழ்வார்கள் என நமது பெரியோர்கள் எல்லாம் இறைவனை பாடும் போது மீண்டும் மீண்டும் சொல்லி இருப்பது உன்னை நினைத்து அழுது தொழுது பாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். யாரும் அதை சொல்லாமல் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.

உன்னை நினைக்கும் போது கண்ணீர் பெருகுகிறது அதனால் உன்னை நினைக்கின்றோம் அந்தக் கண்ணீரால் உனக்கு நீராட்டுகிறோம். உன்னை நினைத்தால் உள்ளத்தில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தெரிகிறது என்று நம் முன்னோர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். அப்போது இது ஒன்றும் புதிது இல்லை நீண்ட நெடிய காலமாக இந்த வழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு ஒரு சில குறிப்பிட்ட இறைவனை பார்க்கும்போது நான் அழுக வேண்டும் என்று நினைப்பதில்லை, ஆனால் கண்களில் இருந்து என்னையும் அறியாமல் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வருகிறது. அதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் புரிவதில்லை.

உரிமை

ஒரு தாய்க்கும் ஒரு குழந்தைக்குமான உறவு எவ்வளவு ஒரு புனிதமான உறவு என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோல இறைவன் ஒரு தாய்.. நாமெல்லாம் ஒரு குழந்தை குழந்தை. அதனால் அந்த தாயின் முன் நிற்கும்போது அந்த தாயை பார்க்கும்போது நம்மையும் அறியாத ஒரு ஈர்ப்பு தாயிடம் ஏற்படுவது ஒவ்வொரு ஆன்மாக்களுக்கும் உண்டான நியதியே அதனால் அந்த இறைவனை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் ஏற்படுகிற அந்த கண்ணீரை உரிமை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். எந்த தெய்வத்திற்கு நமக்கும் இடையே உரிமை இருக்கிறதோ நிச்சயமாக அந்த தெய்வத்தை பார்க்கும்போது ஒன்று இன்பத்தின் உச்சத்தில் கண்ணீர் வரும் அப்படி இல்லை என்றால் துன்பத்தில் உச்சத்தில் நமக்கு கண்ணீர் வரும்.

தூய்மையின் வெளிப்பாடு

இது இயற்கையான ஒரு செயல். இது ஒன்றும் புதிது கிடையாது. அவர் என்னுடைய நாயகன் எனக்கு உரிமையான தெய்வம். அந்த உரிமை யாரிடத்தில் இருக்கிறதோ நிச்சயமாக அங்கு கண்ணீர் வரும். தூய்மையின் வெளிப்பாடு என் உள்ள உருக்கத்தின் வெளிப்பாடு எது என்றால் அது கண்ணீர் தான் உள்ளம் உருகுகிறது என்பதை நான் எப்படி வெளியில் காட்ட முடியும். ஒருவர் நமது உறவாக இருக்கட்டும், நட்பாக இருக்கட்டும், யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர் மீது அதீத உரிமை இருக்கிறது என்றால் நீங்கள் வார்த்தையில் விளக்கி விளக்கி எத்தனை முறை நீங்கள சொல்லிக் கொண்டு இருந்தாலும் சமயத்தில் விளங்காது. வார்த்தையில் விளக்க முடியாத அந்த அன்பு ஒரு இரண்டு சொட்டு கண்ணீர் துளி காட்டிவிடும். இந்த உலகில் எல்லோருக்காகவும் நம்மால் சிரித்து விட முடியும். ஆனால் எல்லாருக்காகவும் நம்மால் அழ முடியாது. அது மிகவும் கஷ்டம் நம் உலகில் யாரைப் பார்க்க வேண்டுமானாலும் சிரித்துவிட்டு போய்விடலாம். அது சுலபமான விஷயம். ஆனால் இன்னொரு உயிருக்காக கண்களில் இருந்து கண்ணீர் வருமானால் அது உரிமை இல்லாமல் அன்பு இல்லாமல் வரவே வராது எங்கே அன்பு இருக்கிறதோ எங்கே உரிமை இருக்கிறதோ அவர்களிடத்தில் மட்டும்தான் நமக்கு கண்ணீர் பெருகும்.

நாட்டில் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். எவ்வளவோ உயிர்கள் துன்பப்படுகிறது. ஆனால் அதை காபி குடித்துக் கொண்டே படித்து விட்டு கடக்கிறோம் நாம். ஆனால் நமக்கு உரிமையாளர்களுக்கும், அன்பானவர்களுக்கும் ஒரு துன்பம் வந்தது என்றால் நம்ம சாப்பிட முடிவதில்லை.. காபி குடிக்க முடிவதில்லை.. பேப்பர் படிக்க முடியவில்லை.. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அங்கு உரிமையும், அன்பும் இருக்கிறது என்பதற்கு அது ஒன்றுதான் உடலின் உள்ளத்தின் வெளிப்பாடு.. சாட்சி.

மன வெளிப்பாடு

அதேபோல்தான் எந்த இறைவனிடத்தில் உங்களுக்கு உரிமையும் அன்பும் அதிகமாக இருக்கிறதோ.. அங்கு உங்களையும் அறியாமல் கண்ணீர் மூலம் உங்கள் மனம் வெளிப்படுத்துகிறது. உங்கள் உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் கடவுளின் முன் கண்ணீர் வந்தால் அது மிகவும் தப்பான விஷயம் இல்லை. இயல்பான மிக நல்ல ஒரு விஷயங்களில் ஒன்று. அதனால் அழுது இறைவனை பெறுவதற்கு உண்டான வழியை நமது ஆன்மா பழகி இருக்கிறது என்பதை சந்தோஷமாக மகிழ்ச்சியாக நாம் கடந்து போக வேண்டிய ஒன்று." இவ்வாறு தேச மங்கையர்கரசி விளக்கம் அளித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள நிபுணர்களை அணுகி பலன் பெறலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்