தமிழ் செய்திகள்  /  Astrology  /  Astro Tips: Can We Cook Spinach On Friday, Tuesday, Puja Days?

Astro Tips: வெள்ளி.. செவ்வாய்.. பூஜை நாட்களில் கீரை சமைக்கலாமா?

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 24, 2024 11:56 AM IST

செவ்வாய் வெள்ளி கிழமைகள் அன்னை மகாலெட்சுமிக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாட்களில் மகாலெட்சுமிக்கு மிகவும் உகந்த துவரம்பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு போன்ற பருப்பு வகைகளை பயன்படுத்தி சாம்பார் போன்ற உணவுகளை சமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

வெள்ளி செவ்வாயில் கீரை சமைக்கலாமா?
வெள்ளி செவ்வாயில் கீரை சமைக்கலாமா? (Unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

அப்படி ஒரு தவறுதான் செவ்வாய், வெள்ளி, பண்டிகை நாட்களில் கீரையை சமைத்து சாப்பிடுவது. இப்படி செய்வதால் நம் வேண்டுதலுக்கு உரிய பலன் கிடைக்காமல் போகிறது என்று கூறப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மை என்று நீங்கள் யோசித்தது உண்டா?

பொதுவாகவே செவ்வாய், வெள்ளி கிழமைகள் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் வெள்ளி கிழமைகள் அன்னை மகாலெட்சுமிக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அந்த நாட்களில் மகாலெட்சுமிக்கு மிகவும் உகந்த துவரம்பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு போன்ற பருப்பு வகைகளை பயன்படுத்தி சாம்பார் போன்ற உணவுகளை சமைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி செய்வதால் மகாலெட்சுமி மகிழ்ச்சி அடைவார் என்று நம்பப்படுகிறது.

அதேசமயம் நாம் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மறந்தும் கீரையை சமைக்க கூடாது.

நாம் பொதுவாக வெள்ளி, செவ்வாய் பண்டிகை நாட்களில் கடவுளை வணங்குவது மனது தெளிவாகி நிம்மதி பெற வேண்டும், நம் வீட்டில் அமைதி நிறைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கடவுளை வணங்குகிறோம். ஆனால் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்று கடவுளை வணங்கும் ஒரு நாளில் தெளிவற்ற ஒரு உணவை சமைப்பது போன்றதுதான் கீரை சமையல்.

குறிப்பாக கீரை சமைக்கும்போது பருப்பு வெங்காயம் தக்காளி பூண்டு எல்லாவற்றையும் சேர்த்து கீரை கடைகிறோம். ஆனால் கடைந்த கீரையை எடுத்து இலையில் பரிமாறும் போது அதில் நாம் சேர்த்த எந்த பொருளையும் தனியாக எடுக்க முடியாது.

ஆனால் நாம் ஒரு சாம்பார் வைக்கும் போது கத்திரிக்காய், முள்ளங்கி, மாங்காய், முருங்கை காய் போன்ற காய்களை தெளிவாக எடுத்து பரிமாற முடியும். ஆனால் அதுபோல் கீரை கூட்டில் நாம் அதில் சேர்த்த வெங்காயம் தக்காளி பூண்டு போன்றவற்றை தனியாக எடுத்து வைக்க முடியாது. இப்படி கீரையில் எப்படி எல்லா பொருட்களும் போட்டு குழம்பி இருக்குமோ, அதுபோல் நாமும் குழப்பமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பது நம்பிக்கை. இதனால் தான் பூஜை நாளில் குறிப்பாக வெள்ளி செவ்வாய் பண்டிகை நாட்களில் நாம் கீரைகளை சமைக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கசப்பான பொருட்களை சமைக்க கூடாது என்றும் கூறப்படுகிறது. அதனால் அதலக்காய், பாகற்காய் போன்ற காய்களை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் சமைக்க கூடாது. அகத்திக்கீரையையும் சமைக்க கூடாது. வேண்டுமானால் அகத்திக்கீரையை வாங்கி பசு மாட்டுக்கு உண்ண கொடுக்கலாம்.

வெள்ளி செவ்வாய் நாளில் அகத்திக் கீரையையும் நாம் உணவில் சேர்க்க கூடாது.

கசப்பு சுவை நம் உடலுக்கு நல்லதுதான். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். செவ்வாய் வெள்ளி தவிர்த்த மற்ற நாட்களில் சமைத்து சாப்பிடலாம்.

(பொறுப்புத்துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான அடிப்படையில் உள்ளன. தெளிவாக தெரிந்து கொள்ள சரியான நிபுணரை அணுகி அறிந்து கொள்ளவும்.)

WhatsApp channel

டாபிக்ஸ்