தமிழ் செய்திகள்  /  Astrology  /  As Guru And Venus Conjoin In Aries We Will See Rasis Enjoying Royal Life

குரு சுக்கிரன் மேஷத்தில் அதிரடி.. பண மழையில் நனையும் ராசிகள்.. ஜாக்பாட் வருகின்றது.. ஏப்ரல் மாதம் குறி

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 29, 2024 03:46 PM IST

Guru and Venus: சுக்கிரன் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். குருபகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையானது நிகழப் போகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

குரு சுக்கிரன்
குரு சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

சுக்கிரன் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். குருபகவான் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையானது நிகழப் போகின்றது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் மற்றும் குரு இவர்களின் சேர்க்கை உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கின்றது. வாழ்க்கையில் பல்வேறு விதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பல்வேறு விதமான வாய்ப்புகளால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் இணைந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றனர். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்திகள் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய மற்றும் சிறந்த வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கொடுக்கப் போகின்றனர். வாழ்வில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பரம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். வருமானத்தில் எதிர்பாராத நேரத்தில் அதிகரிப்பு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதிச் சுமை குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel