Panguni Uthiram : சுவாமிமலையில் பங்குனி உத்திரம் - எப்போ தெரியுமா?
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் நான்காம் தேதி அன்று தொடங்குகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஆறு படை வீடுகளில் இந்த திருநாள் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும்.
இந்நிலையில் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழ்ந்துவரும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் வருகிற ஏப்ரல் நான்காம் தேதி அன்று பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பங்குனி உத்திர திருநாளன்று காலை சுப்பிரமணிய சுவாமியும், வள்ளி தேவசேனாவும் வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா வருவார்கள். அதன் பின்னர் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு நேரத்தில் வெள்ளி ரதத்தில் வீதி உலா மற்றும் நடன குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஏப்ரல் ஆறாம் தேதி அன்று இரவு விக்னேஸ்வர பூஜை நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று காலை வள்ளி தேவசேனா, சண்முகநாதர், வேடமூர்த்தி, நம்பிராஜன் உள்ளிட்டோர் நந்த மோகினி உற்சவம் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
மேலும் முக்கிய நிகழ்ச்சியான யானை விரட்டுதல் நிகழ்ச்சி ஏப்ரல் எட்டாம் தேதி அன்று காலை அரசியல் ஆற்றில் நடைபெறும். அதேபோல் அளவந்திபுரம் நடுத்தெருவில் இருந்து சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
அதன்பின்னர் சுப்பிரமணிய சுவாமிக்கும், வள்ளிநாயகிக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் ஏப்ரல் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஊஞ்சல் உற்சவம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் பதினோராம் தேதியன்று இரவு திருக்கல்யாண உற்சவம் வள்ளி தேவசேனா, சண்முகசுவாமி புறப்படுதலும் நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி அன்று காலை சுப்பிரமணிய சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும், அன்றைய தினம் இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை சுவாமிமலை திருக்கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத் துறையும், பொதுமக்களும் சேர்ந்து செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்