நாளை சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி.. மேஷம், மிதுனம், விருச்சிக ராசியினரே ரெடியா?.. 2025 தொடக்கமே ஜாக்பாட் தான்!
ஜோதிட கணக்கீடுகளின் படி, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், நாளை (டிசம்பர் 29) சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் பற்றி பார்ப்போம்.
சூரிய பகவான் நவகிரகங்களின் அரசனாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் சூரிய பகவானின் நிலை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. சூரியனின் நிலையைப் பொருத்து ஒருவரின் செல்வாக்கு, திறமை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. அவ்வாறு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றம் சிலருக்கு நல்லதாக அமையும், சிலருக்கு இது அமங்கலமானதாக அமையலாம்.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வுதான். தற்போது டிசம்பர் மாதத்தின் கடைசியில் உள்ளோம். இன்னும் சில தினங்களில் புத்தாண்டில் நுழைய இருக்கும் சூழலில், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அதாவது (நாளை) டிசம்பர் 29 அன்று சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார்.
சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக 2025 புத்தாண்டின் தொடக்கம் சூப்பராக இருக்கப் போகிறது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பற்றி அறிந்துகொள்வோம்.
மேஷம்
சூரியனின் இந்தாண்டின் கடைசி நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வெற்றிகளை கொண்டு வருகிறது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் மூலம் நிதி நிலைமை மேம்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருப்பதால், வணிகர்களுக்கு நல்ல புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபத்துடன் பணத்தை சேமிக்கவும் முடியும். சிலருக்கு காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வெற்றிகள் குவியும். உங்கள் கடின உழைப்புக்கான நல்ல பலன் கிடைக்கும் நேரம் இது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான உறவுகள் மேம்படும். தொழில் ரீதியாக பல சுப பலன்களைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்து. வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர பெயர்ச்சியானது பண வரவை அதிகரிக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம். கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும், செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நிதி வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்