April Eclipse Predictions 2024: ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரக நிலை எப்படி உள்ளது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  April Eclipse Predictions 2024: ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரக நிலை எப்படி உள்ளது?

April Eclipse Predictions 2024: ஏப்ரல் மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரக நிலை எப்படி உள்ளது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 29, 2024 09:45 PM IST

ஏப்ரல் 2024 மாதத்தில் 12 ராசிகளுக்குமான கிரக நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை ஜோதிட கணிப்பு படி பார்க்கலாம்

ஏப்ரல் 2024 மாதத்தில் 12 ராசிகளுக்குமான கிரக நிலை
ஏப்ரல் 2024 மாதத்தில் 12 ராசிகளுக்குமான கிரக நிலை

மேஷம்

உங்களைச் சுற்றி நிகழும் மாற்றங்களுக்கு விழிப்புடன் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. ஏப்ரலில் கிரக நிலைகளால் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.இதன் காரணமாக சில பிரச்னைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். செவ்வாய்-சனி இணைவு உங்களை கடுமையாக தாக்கும்.

இருப்பினும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைவீர்கள். வியாழன் இணைவு புதிய யோசனைகளையும், அதன் நல்ல பலன்களையும் தரலாம்

ரிஷபம்

ஏப்ரல் மாதம் கடினமான மாதமாக இருக்கும். 8 ஆம் தேதி மேஷம் சூரிய கிரகணம், 10 ஆம் தேதி செவ்வாய்-சனி இணைவு நெருக்கமானவர்களிடமிருந்து வெளியேறுவதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம். இதனால் மனமும் காயப்படுத்தலாம்,

சுயமாக யோசித்து செயல்பட்டால் நினைத்ததை அடையலாம். சூரியன் 19 ஆம் தேதி ரிஷப ராசிக்கு நகர்கிறார், அதைத் தொடர்ந்து 20ஆம் தேதி உங்கள் ராசியில் வியாழன் இணைவு. புத்துணர்ச்சியை தரும். தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தினால் நல்ல பலனை பெறலாம்

மிதுனம்

ஏப்ரல் 8இல் நிகழும் கிரகணம் உங்களுக்கு நன்மையை தருபவையாக இருக்கும். மேஷத்தில் புதன் விலகுவதால் குடும்பத்தில் வாக்குவாதங்கள் நிகழலாம். மன அழுத்தம் இருந்தாலும் பிரச்னைகளை எளிதாக சமாளிப்பீர்கள். ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழன் இணைப்பு முன்னேற்றங்களை கொண்டு வரும்,

கடகம்

உங்கள் தொழில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும்.  மேஷ கிரகணம் 8 ஆம் தேதி உங்கள் பத்தாவது வீட்டை உற்சாகப்படுத்துகிறது. இருப்பினும், சவால்களை எதிர்கொள்ளும் காலமாக இருக்கும். 

10 ஆம் தேதி செவ்வாய்-சனி சேர்க்கை நீண்ட கால திட்டங்கள் அல்லது கல்வி முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கலாம். 20 ஆம் தேதி வியாழன் எடுத்த முயற்சிகளில் வெற்றியையும், நல்ல பலனைத் தரும்

சிம்மம்

உங்கள் கவனம் பயணம், கல்வி மற்றும் ஆன்மீகத்தில் இருக்கும். நிதி நெருக்கடிகள் ஏற்படும்.  ஏப்ரல் 10 ஆம் தேதி செவ்வாய்-சனி இணைவு சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம். பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய தொடக்கங்களை வழிவகுக்கும் மாதமாக உள்ளது

கன்னி 

வெளிநாடுகளில் பயணம் செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படு மாதமாக ஏப்ரல் உள்ளது.  வணிகத்தில் இருப்போர் குறிப்பிடத்தக்க சந்திக்கலாம்.  பூர்வீக சொத்துக்கள் மற்றும் நிதி விவகாரங்களில்  சிக்கல் உருவாகலாம். ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழன் இணைவு புதிய வாய்ப்புகளை பெற்று தரும்

துலாம்

எடுத்த காரியங்களையும், சவால்களையும் வெற்றிகரமாக முறியடிக்கும் மாதமாக உள்ளது.  ஏப்ரல் 8 ஆம் தேதி வரவிருக்கும் கிரகணம் தைரியமும், நம்பிக்கையும் தரும். புதிய நிதி ஆதாரங்கள் ஏற்படலாம். ஏப்ரல் 20 வியாழன் இணைவு நன்மையை தரும். ஆன்மீகத்த கடைப்பிடித்தால் வளர்ச்சியைத் காணலாம். 

விருச்சிகம்

பணியிடங்களில் சக ஊழியர்கள் தெந்தரவு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  வெளியூர் பயணத்தில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். 

ஏப்ரல் 10 ஆம் தேதி செவ்வாய்-சனி இணைவு நெருக்கடி நிலையை ஏற்படுத்தலாம். 20 ஆம் தேதி வியாழன் இணைவு சவால்களை தரும்.  கணவன் மனைவி பரஸ்பர ஆதரவு தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.

தனுசு

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும் மாதமாக ஏப்ரல் உள்ளது. குடும்ப பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செவ்வாய்-சனி சேர்க்கை ஆகியவை வீட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். குழந்தைகளின் எதிர்கால தேவைகளை மனதில் வைத்து முடிவுகள் எடுப்பீர்கள்.

20 ஆம் தேதி வியாழன் இணைப்பு,  வேலையில் மாற்றம் அல்லது புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைவீர்கள்

மகரம்

இல்லற வாழ்க்கை மகிழ்ச்சகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் கிடைக்கும். ஏப்ரல் 10ஆம் தேதி செவ்வாய்-சனி இணைவதால், குடும்பப் பிரச்னைகளை நிவர்த்தி ஆகும்.

ஏப்ரல் 20ஆம் தேதி வியாழன் இணைப்பு திருப்புங்களை ஏற்படுத்தலாம். மகிழ்ச்சி தரும் செய்திகள் காதுகளை வந்து அடையலாம்.

கும்பம்

திட்டமிட்டபடி காரியங்களில் சுணக்கம் ஏற்படலாம். பணத்தை கையாளுவதில் கவனமுடன் இருக்க வேண்டும்.  பல சவால்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எந்த காரியத்தை செய்தாலும் நெருக்கமானவர்களிடம் கலந்தாலோசித்து செய்வது நன்மை பயக்கும்.

மீனம்

ஏப்ரல் 10ஆம் தேதி  செவ்வாய்-சனி இணைவு காரணமாக நிதிநிலையில் இழப்புகள் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும். அதே வேலையில் ஏப்ரல் 8 அன்று நிகழும் கிரகணம் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பையும் உருவாக்கும்.  ஏப்ரல் 20ஆம் தேதி வியாழன் இணைவு நன்மையை தரும். குடும்பத்தினர் முழு ஆதரவாக இருப்பார்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்