தமிழ் செய்திகள்  /  Astrology  /  Ambika Dosha Was Removed On Karthigai Festival

Karthigai Festival: தேவி புராணம் கூறும் கார்த்திகை திருநாள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 12:16 PM IST

கார்த்திகை விரதம் இருந்து தீபமேற்றி அம்பிகை தனது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார்

கார்த்திகை திருநாள்
கார்த்திகை திருநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

திருவண்ணாமலையில் தவம் செய்ய வந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் செய்தார். அப்போது அம்பிகை தவறுதலாக அங்கிருந்து சிவலிங்கத்தை உடைத்து விட்டார். அதன் காரணமாக அம்பிகைக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக கார்த்திகை தீபம் ஏற்று விரதம் இருந்தால் அம்பிகை. இந்நிலையில் அவரது தோஷம் நிவர்த்தி ஆனதாகத் தேவி புராணம் கூறுகிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று குறைந்தது 27 தீபங்கள் ஆவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு தீபத்தை வணங்க வேண்டும் ஏனென்றால் தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறார்.

கார்த்திகை திருநாளில் அவல்பொரி, வெல்லப்பாகு, தேங்காய் துருவல் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். நமது வேண்டுதல்களை மனதார சிவபெருமானிடம் கூறினால் தீபத்தில் இருக்கும் ஜோதியாய் நமது வாழ்க்கையை விளக்கேற்றி வைப்பார் என்பது ஐதீகம் ஆகும்.

WhatsApp channel