Amavasya Birth: அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களா? ஜோதிடம் சொல்லும் உண்மை என்ன?
“அமாவாசையில் பிறந்தவர்கள் ஒருவகையில் திருடுபவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் பொருட்களை அல்ல, மனதையும்,அன்பையும் திருடுவதில் வல்லவர்கள்”

அமாவாசை நேரத்தில் குழந்தைகள் பிறந்தால் திருடர்களாக பிறப்பார்கள் என பார்வை சிலரிடம் உள்ளது. அமாவாசையில், தாய் கிரகமான சந்திரன் மறைவதால் தாயின் அரவணைப்பு அமாவாசையில் பிறந்தவர்களுக்கு குறையும் என்பது சாஸ்திர நம்பிக்கையகா உள்ளது.
எனவே தாயின் அரவணைப்பில் வளராத ஆணாக இருந்தால் திருடராகவும், பெண்ணாக இருந்தால் நல்லொழுக்கம் இல்லாதவராக இருப்பார் என்பது வழிவழியாக புரிந்து கொள்ளப்பட்ட செய்தியாக உள்ளது.
அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிகளில் ஒன்பது கிரகங்களும் வலுப்பெறுவதால் அந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக திறமை இருக்கும் என பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் கூறுகிறார்.
அமாவாசையில் பிறந்த நபர்கள் வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல், வாய்ப்புகளை அவர்களே உருவாக்கும் திறன்களையும் புத்திசாலிதனத்தையும் பெற்றவர்களாக இருப்பர். இதற்காக சில தவறுகளை அவர்கள் அறியாமல் செய்வார்கள்.
இவர்கள் சுயநலக்காரர்களாக இருக்க மாட்டார்கள். திறமைசாலிகளாக இருப்பார்கள், அவர்களது திறமையை மற்றவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள், அதற்காக வெறுத்து அவர்கள் தங்களைத் தாங்களே தலைவனாகவோ அரசனாகவோ பிரகடனப்படுத்திக் கொள்வர். அதனால் அவர்கள் மீது தலைக்கனம் பிடித்தவர்கள் என்ற விமர்சனம் இருக்கும்.
அமாவாசை அன்று சந்திரன் வலுவிழப்பதால் அமாவாசையில் பிறந்தவர்கள் ஏதாவது ஒரு மன வருத்தத்திலேயே இருப்பார்கள். ஒரு தேடல் இருக்கும். இருப்பதை வைத்துக் கொண்டு திருப்தி அடைய மாட்டார்கள்.
அமாவாசையில் பிறந்தவர்கள் ஒருவகையில் திருடுபவர்கள்தான். ஆனால் மற்றவர்களின் பொருட்களை அல்ல, மனதையும், அன்பையும் திருடுவதில் வல்லவர்கள் என ஜோதிட ஆய்வுகள் மூலம் அறிய முடியும்.
இவர்கள் பெரும்பாலும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள், முடிவு எடுத்தால் எடுத்ததுதான் என ஜோதிடம் கூறுகிறது.

டாபிக்ஸ்