சனி ராகு சேர்ந்து பணத்தைக் கொட்டும் 3 ராசிகள்.. இனிமேல் உங்களை நெருங்க முடியாது.. வந்து பாருங்க தெரியும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி ராகு சேர்ந்து பணத்தைக் கொட்டும் 3 ராசிகள்.. இனிமேல் உங்களை நெருங்க முடியாது.. வந்து பாருங்க தெரியும்!

சனி ராகு சேர்ந்து பணத்தைக் கொட்டும் 3 ராசிகள்.. இனிமேல் உங்களை நெருங்க முடியாது.. வந்து பாருங்க தெரியும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 26, 2024 12:21 PM IST

Saturn and Rahu: ராகு மற்றும் சனி இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பயணம் செய்து வருவது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையில் பெறப் போகின்றனர்.

சனி ராகு சேர்ந்து பணத்தைக் கொட்டும் 3 ராசிகள்.. இனிமேல் உங்களை நெருங்க முடியாது.. வந்து பாருங்க தெரியும்!
சனி ராகு சேர்ந்து பணத்தைக் கொட்டும் 3 ராசிகள்.. இனிமேல் உங்களை நெருங்க முடியாது.. வந்து பாருங்க தெரியும்!

இது போன்ற போட்டோக்கள்

நவகிரகங்களின் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு பகவான் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். இது ராகு பகவானின் நட்சத்திரமாகும். ராகு பகவானும் அதே நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு சனி மற்றும் ராகு இவர்கள் இருவரும் ஒரே நட்சத்திரத்தில் இணைந்துள்ளனர்.

ராகு மற்றும் சனி இருவரும் ஒரே நட்சத்திரத்தில் பயணம் செய்து வருவது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜ வாழ்க்கையில் பெறப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறிப்பிட்டு இன்று காணலாம்.

மகர ராசி

ராகு மற்றும் சனி சேர்ந்து உங்களுக்கு ராஜ யோகத்தை கொடுத்துள்ளனர். எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்க கூடும். இந்த காலகட்டத்தில் நீங்கள் இழந்த பணத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும். கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். 

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கேட்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம் ராசி

சனி மற்றும் ராகு ஒரே நட்சத்திரத்தில் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு யோகம் கிடைக்கப்போகின்றது. பல்வேறு விதமான பலன்கள் உங்களை தேடி வரும். எதிர்பாராத நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்றார். ஆறாவது வீட்டில் ராகு பகவான் முளைக்கின்றார். 

இதனால் உங்களுக்கு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

சனி மற்றும் ராகு உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்றுத்தரப் போகின்றனர். சனிபகவான் உங்கள் ராசியில் அதிர்ஷ்ட வீட்டு நுழைந்துள்ளார். ராகு பகவான் உங்கள் கர்ம வீட்டில் நகர் நின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சூழ்நிலைகளில் நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். எதிர்பாராத நேரத்தில் பணம் உங்களைத் தேடி வரும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்..வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபார ரீதியாக நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடைகிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

Whats_app_banner