தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kanda Sashti Viratham: கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

Kanda Sashti Viratham: கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

Karthikeyan S HT Tamil
Nov 15, 2023 07:09 AM IST

ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்நாட்களில் முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும்.

முருகன்
முருகன்

ஒருசமயம் முனிவர்கள் சிலர், உலக நன்மைக்காக ஒரு புத்திரன் வேண்டும் என்பதற்காக யாகத்தை நடத்தி உள்ளனர். ஐப்பசி மாத அமாவாசையன்று யாகத்தை தொடங்கி 6 நாட்கள் நடத்தினர். யாக குண்டத்தில் எழுந்த தீயில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு வித்து வீதமாக 6 வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்களை 6ஆம் நாளில் ஒன்றாக்கிட முருகப்பெருமான் அவதரித்தார். இவ்வாறு முருகன் அவதரித்த நாளே கந்தசஷ்டி என மகாபாரதம் கூறுகிறது.

கந்தபுராணத்தின் கூற்றுப்படி, கச்சியப்ப சிவாச்சாரியார், முருகனின் அருள் வேண்டி ஐப்பசி மாத வளர்பிறையில் இருந்து 6 நாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து நோன்பு இருந்தாகவும், தேவர்களும், அசுரங்களை வெல்லும் சக்தியை பெற முருகப் பெருமானை நினைத்து 6 நாட்கள் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது. முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவு கூறும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறது கந்தபுராணம்.

கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்க வேண்டும் ?

ஐப்பசி வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் சஷ்டி விரத நாட்கள் ஆகும். இந்நாட்களில் முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாட்களில் சிறிதளவு பால், பழம் சாப்பிட்டு ஆறாம் நாளன்று முழுவதுமாக விரதம் இருக்க வேண்டும்.

இந்நாட்களில் கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவொண்பா போன்ற நூல்களில் ஏதாவது ஒன்றைபாடுவது அவசியம். மேற்சொன்னபடி விரதத்தை கடைபிடித்தால் முருகப் பெருமானின் அருளால் பாவம் பறந்தோடிவிடும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடலோரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா துவங்கியுள்ள நிலையில்,  பச்சை நிறம் ஆடை அணிந்து அங்க பிரதட்சனம் செய்து பக்தர்கள் விரதத்தை துவங்கி உள்ளனர். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்